நான் நிறைய தப்பு பண்ணியிருக்கேன்…. ஒரு வழியா ஒப்புக்கொண்ட சமந்தா!

Author:
5 November 2024, 3:10 pm

பிரபல நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவராக பார்க்கப்பட்டு வருகிறார். திரைத்துறையை சாராத குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் நடிகை சமந்தா.

ஆரம்பத்தில் வெல்கம் கேர்ளாக கடைகளில் பணியாற்றி அதன் பிறகு மாடலிங் துறையில் தனது ஆர்வத்தை செலுத்தி பிறகு திரைப்பட வாய்ப்பு கிடைக்க கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மேற்கேற்றி இன்று தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக பெயர் எடுத்திருக்கிறார்.

samantha

தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு தெலுங்கு சினிமாவிலும் அடுத்தடுத்து தொடர் ஹிட் திரைப்படங்கள் கை கொடுத்ததால் அங்கும் நட்சத்திர நடிகையாக தெலுங்கு சினிமாவில் ரசிகர்களின் வீட்டு பெண்ணாகவே சமந்தா பார்க்கப் பட்டார்.

அந்த அளவுக்கு இவரது வளர்ச்சி மிக குறுகிய காலத்திலேயே புகழ்பெற்றது. பிரபல இளம் ஹீரோவான நாக சைதன்யாவை காதலித்து வந்த நடிகை சமந்தா 8 ஆண்டு காதலுக்கு பிறகு பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. குறிப்பாக காதல் ஜோடிகளின் எடுத்துக்காட்டான ஜோடியாக பார்க்கப்பட்டார்கள்.

இதனிடையே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். விவாகரத்துக்கு பிறகு சமத்தா தன்னுடைய கெரியரில் அதிக கவனத்தை செலுத்தி நடித்து வருகிறார். கூடிய விரைவில் நாக சைத்தன்யா மற்றும் சோபிதா துலிபாலா தம்பதிக்கு திருமணம் நடைபெற இருக்கிறது .

samantha

இப்படியான சமயத்தில் சமந்தா சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார். அதாவது நான் கடந்த காலத்தில் நிறைய சில தவறுகளை செய்திருக்கிறேன். அது உண்மைதான் ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும் .

இன்னும் சொல்லப்போனால் கடந்த காலத்தில் எனக்கு சில விஷயங்கள் சரியாகவே அமையவில்லை அந்த தோல்விகளை நான் ஏற்றுக்கொள்கிறேன் என சமந்தா அந்த பேட்டியில் கூறியிருந்தார். ரசிகர்கள் சமந்தா தவறுகளாக எதை சொல்கிறார்? அவர் திருமணத்தை தேர்ந்தெடுத்ததா? அல்லது நாக சைதன்யாவுடன் வாழும் போது ஏதேனும் தவறு செய்ததை இப்படி சொல்கிறாரா? அல்லது படத்திற்காக அவர் தேர்வு செய்த கதைகள் தவறு என சொல்கிறாரா என்ற ஒரு கேள்வியை குழப்பத்துடன் எழுப்பி இருக்கிறார்கள் .

samantha

இருந்தாலும் சமந்தா மனம் திறந்து தன்னுடைய தவறை ஒப்புக்கொண்ட விதம் ரசிகர்கள் பலருக்கும் வேதனை அளித்து இருக்கிறது. ஏனென்றால் சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா வருகிற டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள இருக்கும் சமயத்தில் சமந்தா இப்படி மனமுடைந்து பேசி இருப்பது ரசிகர்களுக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்திருக்கிறது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 125

    0

    0