40 வயது நடிகைக்கு அம்மாவாக நடிக்கும் சமந்தா?.. அவங்களே அம்மா இதுல அவங்களுக்கு அம்மாவா இவங்களா..!

Author: Vignesh
5 June 2023, 3:45 pm

அழகிய இளம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமந்தா. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கும் இவர் சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.

samantha - updatenews360

தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, விவாகரத்தும் பெற்று விட்டார்.

samantha - updatenews360

மேலும், சமந்தா நடிப்பில் அடுத்ததாக குஷி மற்றும் சீட்டாடல் வெப் தொடர் உருவாகி வருகிறது. இதை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்தநிலையில், “சிட்டாடெல்” வெப் தொடரின் இந்திய பதிப்பில் இந்தி திரையுலக நடிகை பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார். இதில் நடிகை சமந்தாவும் நடித்து வருகிறார். இதில் இந்தி நடிகர் வருண் தவான் உட்பட பலர் நடிக்கின்றனர். இதை “தி பேமிலி மேன்” வெப் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இயக்குகின்றனர். இதில் நடிகை சமந்தா பிரியங்கா சோப்ராவுக்கு அம்மாவாக நடிக்க போவதாக தகவல் வெளியனது. இதை சமந்தா உறுதிப்படுத்தியுள்ளார்.

priyanka chopra - updatenews360

முன்னதாக, மேலும் இந்த கதை 1980,90களில் நடக்கும் பிளாஷ்பேக் காட்சியில் சமந்தா மற்றும் வருண் நடிக்கின்றனர். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் மூத்த நடிகைக்கு சமந்தா அம்மாவாக நடிப்பது பற்றி கிண்டல் செய்து வருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சமந்தா, வருண் மற்றும் படக்குழுவினர் விரைவில் செர்பியா செல்ல உள்ளனர். அங்கு ஒரு மதத்திற்கு மேல் படப்பிடிப்பு நடக்கும் என்ற தகவல் வெளிவந்து உள்ளது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்