இவங்க சூப்பர்ஹிட் ஜோடியாச்சே.. தளபதி 69-ல் விஜயுடன் கைகோர்க்கும் விவாகரத்தான நடிகை..!

Author: Vignesh
4 March 2024, 10:00 am

தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அப்படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 68 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார் .இப்படத்திற்கு “The Greatest Of All Time (G.O.A.T)” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம், கல்பாத்தி அகோரம் இப்படத்தை தயாரிக்கிறது.

பல வருடங்களுக்கு பிறகு தளபதி 68 படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். ஆம், பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறார்கள்.

Vijay - Updatenews360

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியது. அதில் விஜய் அப்பா, மகன் என இரண்டு ரோல்களில் நடிக்கிறார் என்பதை தெரியப்படுத்தினர். இப்படத்தில் மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார். இதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கவுள்ளதாக முன்னர் வெளியான செய்திகள் கூறியது. இதில் லைலா இருப்பதால் ஒருவேளை அப்பா விஜய்க்கு ஜோடியாக லைலா நடிக்கிறாரோ? அப்போ சினேகா எந்த ரோலில் நடிக்கிறார் என குழப்பங்கள் ஏற்பட்டது. படத்தின் ஷூட்டிங் தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் லேட்டஸ்ட் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

goat

அதாவது, கோட் படத்திற்கு பின்னர் தளபதி நடிக்கவிருக்கும் கடைசி திரைப்படம் 69 இதன் பின்னர், விஜய் அரசியலில் முழு நேரத்தை செலவிடப் போவதாக கூறியுள்ளார். தற்போது, தளபதி 69 படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்து தொடர்ந்து பல விதமான செய்திகள் வெளியாகி கொண்டிருந்தது. அட்லி, கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன், சமீபத்தில் RJ பாலாஜி என பல்வேறு இயக்குனர்களின் பெயர்கள் இந்த லிஸ்டில் அடிபட்டது.

Vijay - Updatenews360

இந்நிலையில், யார் விஜய்யை இயக்கப் போகிறார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், லேட்டஸ்ட் தகவல் ஒன்று கோலிவுட்டில் முணுமுணுக்கப்பட்டு வருகிறது. அதாவது, அட்லீ தான் தளபதி 69 படத்தை இயக்கப் போவதாகவும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கப் போவதாகவும், மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளது.

Goat vijay

இதில், கூடுதல் தகவல் என்னவென்றால் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கப் போகிறார் என்பதுதான். கத்தி, தெறி, மற்றும் மெர்சல் ஆகிய படங்களில் விஜயுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்த சமந்தா. மீண்டும் தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என்ற லேட்டஸ்ட் தகவல் வெளியான நிலையில், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது எதுவுமே அதிகாரபூர்வமான அறிவிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 236

    0

    0