தமிழ்த் திரையுலகின் முன்னணி கதாநாயகி சமந்தா கடந்த 2021ம் ஆண்டு நாக சைதன்யாவிடம் இருந்து விவாகரத்து பெற்றார் சமந்தா. சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்துள்ளார் சமந்தா.

தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தார் சமந்தா.அவர் கூறும் சில கருத்துக்கள் சர்ச்சைக்குரிய விஷயமாகி பிறகு காணாமல் போய்விடும்.தற்போது விவாகரத்துக்கு பிறகு தான் சந்தித்த விஷயங்கள் குறித்து ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் சமந்தா.
அதில், ‛‛வாழ்க்கையில் சில விஷயங்களை மாற்ற வேண்டுமென்று நாம நினைப்போம். குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் என்னுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் எல்லாம் நடந்திருக்கக் கூடாது என்று தான் நினைக்கிறேன். என்றாலும் வாழ்க்கை நம் கையில் இல்லை.
வாழ்க்கை என்ன கொடுக்கிறதோ அதை நாம் சந்தித்து தான் ஆக வேண்டும். எல்லோருடைய வாழ்க்கையிலும் பிரச்னைகள், வலிகள் இருக்கிறது. அதை நாம் எப்படி கடந்து வருகிறோம் என்பது தான் முக்கியம். அந்த வலியை கடந்து விட்டால் நாம் வெற்றியாளர்தான். நான் தற்போது என்னை வலிமையானவளாக உணர்கிறேன்.இந்த வலிமையை பெற ஆன்மிகம் தான் எனக்கு உதவியது என சொல்லியுள்ளார்.