பலான காட்சி TO லிப்லாக் வரை… இதுவரை இல்லாத அளவிற்கு உச்சம் தொட்ட சமந்தா..!
Author: Vignesh2 September 2023, 11:36 am
நடிகை சமந்தா தெலுங்கில் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள குஷி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் தேவர்கொண்டா ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படம் இன்று செப்டம்பர் 1ம் தேதி வெளியானது. இப்படத்தில் நடித்ததில் இருந்தே சமந்தா – விஜய் தேவர்கொண்டா இருவரும் நெருக்கமாக பழகி வருகிறார்கள். ஷூட்டிங் பேக்கப் செய்த பின்னரும் கெமிஸ்ட்ரி அள்ளுது என்கிறார்கள் நேரில் பார்த்தவர்கள்.
இதனிடையே படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கூட அரைகுறை ஆடையில் படு நெருக்கமாக ஆடிய நடன வீடியோக்கள் சமூகவலைதங்களில் வெளியாகி விமர்சிக்கப்பட்டது. இதனிடையே நள்ளிரவு நேரத்தில் விஜய் தேவர்கொண்டா சமந்தாவுக்கு போன் செய்து ” உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்” என கூறினார்.
மேலும், முகத்தை காட்டாமல் கையை மட்டும் இறுக்கமாக பிடித்துக்கொண்டு எடுத்த போட்டோவை வெளியிட்டு காதலி இவர் தான் என அறிவித்தார் விஜய் தேவர்கொண்டா. அதை பார்த்த சமந்தாவின் ரசிகர்கள் இது சமந்தாவா இருந்திடக்கூடாது என வேண்டிக்கொண்டனர். தற்போது சமந்தா கலிஃபோர்னியாவுக்கு ட்ரிப் அடித்துள்ளார்.
இந்நிலையில், வெளியான குஷி படத்தை பார்த்த ரசிகர்கள் லிப்லா படுக்கையறை காட்சிகள் குறித்து தற்போது பேசி வருகிறார்கள். என்ன சமந்தா இதெல்லாம் இப்படி மாறிட்டீங்க என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சினிமாவை தாண்டி நிஜ வாழ்க்கையில், சமந்தா விஜய்யை திருமணம் செய்ய போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இருவரும் டேட் செய்கிறார்கள் என்று வதந்திகளும் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், இதற்கு இரு தரப்பினரும் எந்த ஒரு விளக்கமும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.