காதல் ஆசை யாரை விட்டது..ட்ரெண்ட் ஆகும் சமந்தா வீடியோ..யார் அந்த நபர்?

Author: Selvan
14 November 2024, 2:40 pm

சமந்தாவின் காதல் விரிசல்

தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சமந்தா விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது நாக சைதன்யாவை காதலிக்க ஆரம்பித்தார்.

அவர்களது காதலுக்கு முதலில் சைதன்யாவின் வீட்டில் ஒப்புதல் கிடைக்காததால் சில காலம் திருமணத்துக்காக காத்திருந்தார்கள். ஒருவழியாக க்ரீன் சிக்னல் கிடைத்தவுடன் கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் கிறிஸ்தவ முறைப்படியும், ஹிந்து முறைப்படியும் திருமணம் நடைபெற்றது.

samantha marraige click

சில காலம் சேர்ந்து வாழ்ந்த இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர் .அதன் பின்பு மையோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து கொஞ்ச கொஞ்சமாக மீண்டு படத்தில் நடித்தார்.

இதையும் படியுங்க: 10வருடத்திற்கு முன்பே மேஜர் முகுந்தை கொண்டாடிய மலையாள படம்:அட இது தெரியாம போச்சே ….!

சமந்தாவின் காதல் வலை

அந்தவகையில் ராஜ்&டிகே இயக்கத்தில் “சிட்டாடல் ஹனி பன்னி” வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். அது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியானது. அதில் சமந்தாவின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில் சமந்தா தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது ஒருவருடன் கை பிடித்தபடி ஒரு நபருடன் நடந்து வருவது போல இருக்கும் . அந்த நபர் ஒரு தொழிலதிபர் என்று கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் இது காதலாக இருந்தால் நன்றாக இருக்கும் என சமந்தாவை வாழ்த்தி வருகின்றனர்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 184

    0

    0