சினிமாவை விட்டு வெளியேற சமந்தா திடீர் முடிவு? அரிய வகை நோயால் விலகல்? ரசிகர்கள் அதிர்ச்சி!!
Author: Vignesh20 டிசம்பர் 2022, 7:00 மணி
மாநாடு படத்தில் எஸ். ஜே சூர்யா சொல்வது போல், சமந்தா வந்தார், நடித்தார், முதலிடத்தை பிடித்தார், முதலிடத்தில் இருக்கிறார், Repeatu. இந்த வளர்ச்சி எப்போது நடந்தது திட்டவட்டமாகத் தெரியவில்லை. எந்தப் படத்தின் மூலம் இவருக்கான அங்கீகாரம் இவ்வளவு தூரம் கிடைத்தது என்றும் தெரியவில்லை.
ஆனால் காத்துவாக்குல இரண்டு காதல் படம் ரிலீஸான பிறகு சென்னை முழுக்க கதீஜா பற்றிய பேச்சுதான். 2010- ல் மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா.பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், தற்போது சம்மு குட்டி விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் இவரின் நடிப்புக்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள்.பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன், இருவரும் தன்னுடைய விவாகரத்தை அறிவித்தனர்.
விவாகரத்துக்கு பின் பல மாதங்களாக சமந்தா மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் கடுமையான வலியும் கஷ்டத்தையும் சந்தித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதற்காக சமந்தா சிகிச்சை பெற்றும் ஷூட்டிங்கில் கலந்து கொண்டும் வந்துள்ளார். தற்போது அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வர தென் கொரியா நாட்டிற்கு சென்று சிகிச்சையும் பெறவிருக்கிறாராம்.
இந்நிலையில் சமந்தாவுக்கு நோயின் தாக்கம் அதிகரித்ததால் படங்களில் தற்போது நடிக்கப்போவதில்லை என்ற முடிவை சமந்தா எடுத்துள்ளாராம். வரும் ஜனவரி மாதம் தான் கமிட்டாகி டேட் கொடுக்கப்பட்ட குஷி படத்தினை முடித்து விட்டு நீண்ட ஓய்வினை எடுக்கவுள்ளாராம்.
அந்த மயோசிடிஸ் நோயில் இருந்து எப்போது சரியாக மீண்டு வருகிறாரோ அப்போது தான் கமிட்டான படங்களுக்கு டேட் கொடுப்பதாகவும் செய்திகள் பரவி வருகிறது.
1
1