வெறித்தனம் காட்டிய சமந்தா… 25 கிலோ Weight-ஐ தலைக்கு மேல் தூக்கி GYM-ல் வேற லெவல் WORKOUT..!

அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு தமிழ் பெண்ணாக பவ்யமான தோற்றத்தோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா உலகில் உச்சத்தை தொட்டவர் நடிகை சமந்தா. சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.

தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து இருவரும் நடித்து வருகிறார்கள்.

இதனிடையே சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார். நோய்த்தொற்றின் தாக்கத்தினால் உடல் ரீதியாக அவர் நாளுக்கு நாள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாக அவ்வப்போது அவரே கூறியுள்ளார். தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தாலும் அந்த நோய் முற்றிலுமாக குணமாகவில்லையாம். இதனால் நோய் தாக்கத்திலே திரைப்பங்களில் நடித்து வருகிறார் சமந்தா.

இந்நிலையில், தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவு செய்து வரும் சமந்தா. தற்போது 2023 ஆம் ஆண்டில் கடைசி வொர்க் அவுட் எனக் கூறி ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதில், கிட்டத்தட்ட 20 அல்லது 25 கிலோ வெயிட்டை அசால்டாக தலைக்கு மேல் தூக்கி விட்டார் சமந்தா. அந்த வீடியோ தற்போது, இணையதளத்தில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Poorni

Recent Posts

ஊரே கொண்டாடும் DRAGON… படத்தை பார்த்து விஜய் சொன்ன அந்த வார்த்தை!

ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவின் அடுத்த படம்தான் DRAGON. பிரதீப் ரங்நாதன் நடிக்க, ஏஜிஎஸ் நிறுவனம்…

13 minutes ago

சோளக்காட்டில் 10ம் வகுப்பு மாணவி.. 12ம் வகுப்பு மாணவரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. கரூரில் அதிர்ச்சி!

கரூர் அருகே 10ம் வகுப்பு மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 12ம் வகுப்பு மாணவர் பிடிபட்ட நிலையில், மேலும்…

31 minutes ago

தமிழக மக்களுக்கு துரோகம் செய்த திமுக.. பொன்.ரா விளாசல்!

தமிழக மக்களுக்கு இதுமாதிரியான துரோகங்களை செய்துவிட்டு மும்மொழிக் கொள்கை பற்றி முதல்வர் பேசுவதாக பொ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கோயம்புத்தூர்: கோவை மாவட்டம்,…

1 hour ago

கணவருடன் கவர்ச்சி குத்தாட்டம்… நைட் பார்ட்டியில் கீர்த்தி சுரேஷ்!

வாரிசு நடிகையாக சினிமாவில் நுழைந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மேனகாவின் மகளாக மலையாள சினிமாவில் நுழைந்த கீர்த்தி சுரேஷ்க்கு தமிழ்,…

2 hours ago

மீண்டும் தலைதூக்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (பிப்.24) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 55 ரூபாய்க்கு…

2 hours ago

This website uses cookies.