8 நாள் கழித்து திருமண வாழ்த்து கூறிய சமந்தா : பாராட்டும் ரசிகர்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
12 December 2024, 4:35 pm

சமந்தா கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் மீண்டும் நடித்து வருகிறார். நடிகர் நாக சைதன்யாவுடனான திருமணம், பின்னர் விவாகரத்து, நோய் பாதிப்பு என கடந்த காலங்களை மறந்து வருகிறார்.

சமீபத்தில் வருண் தவானுடன், சிட்டாடல் ஹனி பனி எனும் வெப் சீரியஸ் ரிலீசாகி இருந்தது. இந்த சீரியல் வரவேற்பை பெற்றுள்ளது.

கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு வாழ்த்து கூறிய சமந்தா

தொடர்ந்து படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ மற்றும் அவரது காதலர் ஆண்டனி தட்டில் ஆகியோருக்கு இன்று திருமணம் நடந்தது.

கோவாவில் கோலாகலமாக நடந்த திருமணம் நடிகர் விஜய் பங்கேற்று இருந்தார். தற்போது சமந்தா நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க: கோவாவில் கோலாகலமாக நடந்த கீர்த்தி சுரேஷ் திருமணம்..வேஷ்டி சட்டையில் விஜய்!

இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸாக வைத்துள்ள சமந்தா கீர்த்தி – ஆண்டனி திருமண புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த 8 நாட்களுக்கு முன்பு தான் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா நடிகை சோபிதாவை இரண்டாவது திருமணம் செய்தார்.

Samantha Wishes on Keerthy Suresh Marriage

இதனால் சமந்தாவின் மனநிலையை அறிய அவரது ரசிகர்கள் விரும்பியிருந்தனர். ஆனால் அவர் எப்போதும் போல சந்தோஷமாக இருப்பதாக கீர்த்தி சுரேஷ் திருமண வாழ்த்து மூலம் தெரியவந்துள்ளது.

  • Villain actors salary 2024 2024-ல் மிரட்டிய TOP 5 வில்லன்கள்…கோடிகளை அள்ளிய பிரபல நடிகர்கள்..!
  • Views: - 48

    0

    0

    Leave a Reply