அந்த இடத்தில் அத வச்சுக்கிட்டு, இப்ப அந்த மாதிரி இல்லாம.. வெளிப்படையாய் பேசிய சமீரா ரெட்டி..!

Author: Vignesh
22 September 2023, 1:00 pm

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், 2008 ஆம் ஆண்டு சூர்யா இரட்டை வேடங்களில் வெளியான படம் வாரணம் ஆயிரம். இந்த திரைப்படத்தின் மூலம் ஹிந்தி நடிகை சமீரா ரெட்டி, தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதுவரை பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருந்த சமீரா ரெட்டி, தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து அதிகளவு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதன் பிறகு அவர் நடித்த எந்த படங்களும் ஓடவில்லை, அஜித்துடன் நடித்த அசல் உட்பட.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என Pan Indian நடிகையாக வலம் வந்த சமீரா Reddy கடந்த 2014 ஆம் ஆண்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவிற்கு Bye சொன்ன இவர் இல்லற வாழ்க்கையில் பிஸியானார். இவருக்கு இரண்டு குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் சமீரா ரெட்டி ஹிட் படங்களில் நடித்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும்போதே பீல்டு அவுட் ஆகிவிட்டார். அதற்கு காரணமே முதல் குழந்தை பிறந்த பிறகுதான் அதிக உடல் எடை அதிகரித்ததாகவும், அதை பார்த்து பலரும் விமர்சித்ததாகவும், காய்கறி விற்பவர் கூட மோசமாக பேசியிருக்கிறார் என்றும், தன்னுடைய வீட்டை விட்டு வெளியே கூட வரமாட்டேன். பத்திரிகையாளர்களை போட்டோ எடுக்க விடமாட்டேன். அந்த அளவுக்கு இந்த சமூகம் எனக்கு ஒரு மோசமான அனுபவத்தை கொடுத்தது என சமீரா ரெட்டி தெரிவித்து இருந்தார்.

sameera reddy-updatenews360

இதனிடையே, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமராக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து அதில், பேடு பிராஸ், கண்ணுக்கு கலர் லென்ஸ், மேக்கப்போட்டுக்கொண்டு அழகான புகைப்படங்கள் எடுக்க வேண்டிருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. நான் நானாக இருக்கிறேனோ அப்படியே எடுக்க முடியும். யாரை பற்றியும் கவலையில்லை, எந்த அழுத்தமும் இல்லை என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த பதிவு இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 357

    7

    0