நடிகைகளை மிரட்டி அப்படி பண்ண சொல்லுவாங்க.. எனக்கு கூட.. சமீரா ரெட்டி ஓபன் டாக்..!

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், 2008 ஆம் ஆண்டு சூர்யா இரட்டை வேடங்களில் வெளியான படம் வாரணம் ஆயிரம். இந்த திரைப்படத்தின் மூலம் ஹிந்தி நடிகை சமீரா ரெட்டி, தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதுவரை பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருந்த சமீரா ரெட்டி, தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து அதிகளவு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதன் பிறகு அவர் நடித்த எந்த படங்களும் ஓடவில்லை, அஜித்துடன் நடித்த அசல் உட்பட.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என Pan Indian நடிகையாக வலம் வந்த சமீரா Reddy கடந்த 2014 ஆம் ஆண்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவிற்கு Bye சொன்ன இவர் இல்லற வாழ்க்கையில் பிஸியானார். இவருக்கு இரண்டு குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் சமீரா ரெட்டி ஹிட் படங்களில் நடித்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும்போதே பீல்டு அவுட் ஆகிவிட்டார். அதற்கு காரணமே முதல் குழந்தை பிறந்த பிறகுதான் அதிக உடல் எடை அதிகரித்ததாகவும், அதை பார்த்து பலரும் விமர்சித்ததாகவும், காய்கறி விற்பவர் கூட மோசமாக பேசியிருக்கிறார் என்றும், தன்னுடைய வீட்டை விட்டு வெளியே கூட வரமாட்டேன். பத்திரிகையாளர்களை போட்டோ எடுக்க விடமாட்டேன். அந்த அளவுக்கு இந்த சமூகம் எனக்கு ஒரு மோசமான அனுபவத்தை கொடுத்தது என சமீரா ரெட்டி தெரிவித்து இருந்தார்.

சமீபத்தில், அவர் அளித்த பேட்டி ஒன்றில் ஒரு படத்தின் ஷூட்டிங் இருந்தபோது ஒரு காட்சியை முடித்துவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டு இருந்தேன். பின்னர், திடீரென இயக்குனர் என்னிடம் வந்து அடுத்த காட்சி லிப்லாக் காட்சி என்று சொல்லிவிட்டு சென்றார். என்னிடம் எந்த ஒரு முன்னறிவிப்பு சொல்லவில்லை. இப்ப திடீரென லிப்லாக் காட்சி என்று சொல்கிறீர்களே என நான் பதறிப் போய் என்னால் நடிக்க முடியாது என்று கூறினேன். அதற்கு அவர், இதுக்கு முன்னாடி நீங்க நடித்த முசாபர் படத்தில் மட்டும் லிப்லாக் காட்சிகள் இருந்தது. இதுல நடிக்க முடியாதா? முடிந்தால் நடியுங்கள் இல்லை என்றால் இந்த படத்தை விட்டு வெளியே போங்கள் என்று சொல்லி விட்டு சென்று விட்டார்.

லிப்லாக் காட்சியில் நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு நான் தள்ளப்பட்டேன் என்று தெரிவித்திருந்தார். மேலும், இப்படித்தான் தேவையான படுக்கை அறை காட்சிகள் மிகவும் கிளாமரான உடைகள் அணிந்து நடிக்க வேண்டிய கட்டாயங்கள் ஹீரோயின்களுக்கு ஏற்படும். லிப்லாக் காட்சிகள் உள்ளவற்றில் அவர்களுக்கு தேவைப்பட்டால் நாம் நடிக்க வேண்டும் என மிரட்டி அந்த காட்சியை எடுத்து விடுவார்கள் என்ற ஆதங்கத்துடன் சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

அமைச்சர் பொன்முடியின் பதவி பறிப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி உத்ததரவு!

திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…

1 minute ago

திமுக அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு… கொந்தளித்த கனிமொழி எம்பி : என்ன நடந்தது?

திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…

21 minutes ago

அதிமுகவில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியேறுகிறேன்…. கோவை மாவட்ட முக்கிய பிரமுகரின் திடீர் அறிவிப்பு!!

கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…

13 hours ago

ஸ்மார்ட் மீட்டரில் மிகப்பெரிய ஊழல்? ஆதாரங்களுடன் தயாராகும் அண்ணாமலை!

தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…

15 hours ago

ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்

ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…

16 hours ago

கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?

வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…

17 hours ago

This website uses cookies.