மிஷ்கினை பற்றி உங்களுக்கு என்னங்க தெரியும்…நடிகர் சமுத்திரக்கனி ஆவேசம்.!

Author: Selvan
21 February 2025, 7:25 pm

சினிமாவுக்காக உயிரை கொடுப்பவர் மிஸ்கின்

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின்,படம் இயக்குவதை தாண்டி தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

இதையும் படியுங்க: கடையை இழுத்து மூடுற நேரம் வந்தாச்சு…விடாமுயற்சிக்கு வந்த பெரும் சிக்கல்.!

சமீப காலமாக இவருடைய மேடைப்பேச்சு அநாகரீகமாக உள்ளது என பல சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு எதிராக தங்களுடைய கருத்துக்களை சமூகவலைத்தளத்தில் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்துள்ள ராமம் ராகவம் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அவர் பேசிய போது மிஷ்கின் சமீபத்தில் சினிமாவில் இருந்து விலகுவதாக கூறினார்,நான் உடனே ஷாக் ஆகி நீ ஏன் அண்ணா இந்த முடிவு எடுக்கணும்,உனக்குள் இன்னும் இனைறய திறமை இருக்கு என கூறினேன் என்று கூறினேன்.

மேலும் இயக்குனர் மிஷ்கின் நிறைய நல்ல விசயங்களை செய்துள்ளார்,அது யாருடைய கண்ணுக்கும் தெரிவதில்லை,ஒரு சமயம் வெற்றிமாறன் இயக்கிய விசாரணை படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடி மிஷ்கின் படத்தை பார்த்துவிட்டு அவருடைய சொந்த செலவில் கிட்டத்தட்ட 25 லட்சம் ரூபாய் கடன் வாங்கி ஷங்கர் சார்,மணிரத்தினம் சார் என எல்லோரையும் அழைத்து ப்ரீ ஷோ மதுரையில் நடத்தினார்,நான் உடனே மிஷ்கினிடம் நீ ஏன் இவ்ளோ செலவு பண்ணுறன்னு கேட்ட போது,விசாரணை ஒரு நல்ல படம் அது நான் ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்ப்பேன் என செய்தார்.

இதை மாதிரி நிறைய நல்ல படங்களுக்கு அவர் ஆதரவு அளித்துள்ளார்,கொட்டுக்காளி திரைப்படத்தின் போது கூட நிர்வாணமாய் நிக்கிறேன் என்று கூறினார்,அப்போது அவரிடம் நான் கேட்ட போது டேய் ஏதாவது ஒரு விதத்துல இந்த படம் மக்களிடம் போய் சேராதா ,மிஸ்கினு ஒருத்தன் இப்படி பேசுனானே இந்த படத்தில் என்ன இருக்குனு ரசிகர்கள் பார்ப்பங்களா என்று என்னிடம் சொன்னார்,இந்த மாதிரி சினிமாவை ரொம்ப ஆழமாக நேசிக்கக்கூடிய ஒருவராக மிஷ்கின் இருக்கிறார்.

அவர் எப்போதும் நல்ல படங்களை ஆதரித்து,அதை தன்னுடைய சொந்த முயற்சியில் ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பார் என அந்த பேட்டியில் சமுத்திரக்கனி தெரிவித்திருப்பார்.

  • Madhampatty Rangaraj Releationship with Cinema Celebrity மனைவிக்கு துரோகம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ்.. நடிகையுடன் ரகசிய உறவு!
  • Leave a Reply