அவரை மாதிரி தான் நான் இருப்பேன்…பிரபல வில்லன் நடிகரை ரோல் மாடலாக சொன்ன சமுத்திரக்கனி..!

Author: Selvan
1 February 2025, 5:33 pm

ரகுவரனை ரோல் மாடலாக எடுத்த சமுத்திரக்கனி

தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக அறிமுகம் ஆகி பின்பு நடிகர்,இயக்குனர் என கலக்கி வருபவர் சமுத்திரக்கனி.இவர் முதன்முதலில் சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தில் வில்லனாக தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கினார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய ஆரம்ப கால சினிமா பயணத்தை பகிர்ந்துள்ளார்.அதில் அவர் பிரபல வில்லன் நடிகராக இருந்த ஒருவரை பார்த்து தான் எனக்கு நடிப்பின் மீது ஆர்வம் வந்தது என கூறியிருப்பார்.

Samuthirakani inspiration from Raghuvaran

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் தன்னுடைய அசாதாரண நடிப்பால்,அதுவும் நெகடிவ் ரோலில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றவர் நடிகர் ரகுவரன்,இவரது தனித்துவமான நடிப்பு மற்றும் அவரது குரல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.இந்த நிலையில் சமுத்திரக்கனி என்னுடைய ரோல் மாடல் ரகுவரன் சார் தான்,அவரை போல தான் நான் நடந்துகொள்வேன்,அவரை பார்த்து தான் எனக்கு நடிக்க ஆசையே வந்தது என தன்னுடைய ஆரம்பல கால பயணத்தை அந்த நேர்காணலில் பகிர்ந்திருப்பார்.

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த திரு.மாணிக்கம் திரைப்படம் அனைவரையும் பாராட்டை பெற்று OTT தளத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது,இப்படத்தில் இவர் ஒரு நேர்மையான மனிதராக நடித்திருப்பார் என்று சொல்வதை விட வாழ்ந்திருப்பார் என்று சொல்லலாம்,அந்த அளவிற்கு மிக அற்புதமாக நடித்து மக்கள் மனதை கொள்ளையடித்திருப்பார்.

  • Sai Abhyankar viral songs ஹாட்ரிக் வெற்றியில் சாய் அபியங்கர்…ரசிகர்களை சுண்டி இழுத்த “சித்திர புத்திரி” பாடல்..!
  • Leave a Reply