சம்யுக்தா இதோட நிறுத்திக்கோ.. அப்படி என்ன தப்பா நடந்துகிட்டேன்?.. கொந்தளித்த விஜே ரவி..!

Author: Vignesh
27 May 2023, 11:00 am

அண்மை நாட்களாக சீரியலில் இணைந்து நடிக்கும் ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் இணைவது வழக்காக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சிற்பிக்குள் முத்து சீரியலில் நடித்து வந்த நடிகை சம்யுக்தா அதே சீரியலில் நடித்த விஷ்ணுகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

samyuktha vishnukanth-updatenews360

இதனிடையே, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளநிலையில், இருவரும் தங்களது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்த திருமண புகைப்படங்களை டெலிட் செய்து இருக்கிறார்கள்.

samyuktha vishnukanth-updatenews360

முன்னதாக விஷ்ணுகாந்த் சம்யுக்தா தன்னை காதலித்துக் கொண்டிருக்கும் போது நிறைமாத நிலவே சீரியல் நடித்த ரவி என்பவரை காதலித்து பிரேக்கப் ஆன பின்பும் அவருடன் பேசி இருப்பதாக பெரிய குண்டை துக்கிபோட்டு உள்ளார்.

இதற்கான ஆதாரம் இருக்கிறது என்று தெரிவித்து ஒரு ஆடியோவை வெளியிட்டு உள்ளார் விஷ்ணுகாந்த். அதில், ஆடியோவில் அண்ணனாக பேசியவருடன் தன்னிடம் காதலித்த போது தவறாக நடந்து கொண்ட ரவியிடம் பேசாமால் இருக்க முடியவில்லை என்று பல விதமான காரணங்களை சம்யுக்தா தெரிவித்துள்ளார்.

samyuktha vishnukanth-updatenews360

இப்படி அரை மணி நேரம் சம்யுக்தா பேசிய ஆடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, தன் அப்பாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவினை சம்யுக்தா போட்டுள்ளார்.

அந்த பதிவில் வைரலாகும் ஆடியோ பற்றி பலர் கேள்விகளை கேட்டும் திட்டியும் கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளனர். தனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி கூறியும் திட்டித்தீர்த்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தும் பதிலளித்துள்ளதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சம்யுக்தா இணையத்தில் பகிர்ந்து உள்ளது குறிப்டத்தக்கது.

vishnukanth samyuktha-updatenews360

இந்நிலையில், விஷ்ணுகாந்தின் குற்றச்சாட்டை மறுத்துள்ள விஜே ரவி, தன்னை சுற்றி குடும்பத்தினர் பலர் இருக்கிறார்கள். தான் நல்ல அம்மா, அப்பாவுக்கு பிறந்தவன் என்றும், தான் சம்யுக்தா கிட்ட தப்பா நடந்து கிட்டேன் என்று சொல்வதை கேட்கும் போது வியப்பாக உள்ளது என்றும், தன்னுடைய இன்ஸ்டாகிராமில் 475கே பாலோவர்ஸ் இருக்காங்க இந்த இடத்தை பிடிக்க தான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று தனக்கு மட்டும்தான் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

samyuktha vishnukanth-updatenews360

இதுவரை தன்னுடன் இணைந்து நடித்த நடிகர்களிடம் தான் ஒரு நல்ல நண்பனாகத்தான் இருந்து இருக்கிறேன் என்றும், ஒரு விஷ்ணுகாந்த் சொல்வது போல தான் தப்பானவனாக இருந்து இருந்தால், மற்ற நடிகைகளும் தன்னை பற்றி புகார் கொடுத்து இருப்பார்களே என்றும், விஷ்ணுகாந்தின் புகாருக்கு தான் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை, தன்னுடன் பழகியவர்களுக்கு நன்றாக தெரியும் தான் எப்படி என்று என விஜே ரவி விரிவான விளக்கம் கொடுத்துள்ளார்.

vj ravi -updatenews360
  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 734

    5

    0