மலையாளப் படங்களில் அது இருக்கு.. இங்க இதுதான் பிரச்சனை.. – நடிகை சம்யுக்தா OpenTalk..!

Author: Vignesh
14 May 2024, 7:08 pm

கேரள நடிகை சம்யுக்தா மேனன், பாப்கார்ன் என்னும் மலையாள படம் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார். ஜூலை காற்றில், களரி என்னும் தமிழ் படங்களில் கூட நடித்துள்ளார். டோவினோ தாமஸுடன் கல்கி என்னும் படத்தில் நடித்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார்.

samyuktha menon - updatenews360

மேலும் படிக்க: கௌதம் மேனனுக்கு கைகொடுக்கும் சூப்பர் ஸ்டார்.. தரமான காம்போவா இருக்கே..!

சம்யுக்தாவின் சமீபத்திய வெளியீடு மலையாளத்தில் ஆனம் பென்னம். நடிகை சாவித்ரி திரைப்படத்தில் அந்தாலஜியில் திரைப்படத்தில் நடித்தார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ” இந்த நேரத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு நேரம் கிடைக்கும்போது மட்டுமே நான் சமூக வலைதளங்களில் வருவேன், மற்றபடி என் குடும்பத்து உறவினர்களிடம் நேரம் செலவழிப்பேன்” என்று கூறியுள்ளார்.

samyuktha menon - updatenews360

மேலும் படிக்க: அவன் கேடின்னா?.. அவள் ஜில்லா கேடி.. பிரபலத்தை டார் டாராக கிழித்து தொங்கவிட்ட பாடகி சுசித்ரா..!

தற்போது, தெலுங்கு சினிமாவில் பிரபலமாக இருக்கும் சம்யுக்தா தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியிருந்த அந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதாவது, நான் மலையாள சினிமாவில் நடிக்கும் போது மேகப்புக்கு முக்கியத்துவம் இருக்காது. அப்படித்தான் நடித்து பழகி இருந்தேன். ஆனால், தெலுங்கில் நடிக்கும் போது மேக்கப் தான் முக்கியம் என சொன்னார்கள். அதனால், நான் ஷாட்டுக்கு தயாராகி வசனத்தை மனப்பாடம் செய்து வந்து நடிக்க நின்றால், என் சேலையில் ஏதாவது சரியில்லை என சொல்லி சரி செய்ய சொல்வார்கள். அதில், நான் அனைத்தையும் மறந்து விடுவேன். இப்படி மற்ற மொழிகளில் ஹீரோயினிக்கு மேக்கப் மட்டுமே முக்கியம் என்கிற நிலை இருப்பதாக சம்யுக்தா தெரிவித்துள்ளார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 299

    0

    0