ஆபாச Video காட்டி அதே மாதிரி பண்ண சொல்லி அடிச்சாரு – பிரபல சீரியல் நடிகை கண்ணீர் பேட்டி..!
Author: Vignesh31 May 2023, 6:15 pm
அண்மை நாட்களாக சீரியலில் இணைந்து நடிக்கும் ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் இணைவது வழக்காக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சிற்பிக்குள் முத்து சீரியலில் நடித்து வந்த நடிகை சம்யுக்தா அதே சீரியலில் நடித்த விஷ்ணுகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதனிடையே, சின்னத்திரையில் தற்போது மிகப்பெரிய டாப்பிக்காக சென்று கொண்டிருப்பது சீரியல் நட்சத்திரங்கள் சம்யுக்தா – விஷ்ணுகாந்த் திருமண விவகாரம் தான். இருவரும் திருமண வாழ்க்கைக்கு பின் மாறி மாறி குற்றச்சாட்டுகளை சுமத்தி பேட்டிக்கொடுத்து வருவது வைரலாகி வருகிறது.
இந்நிலையில், சம்யுக்தா பற்றிய சில ஆடியோக்களையும் விஷ்ணுகாந்த் வெளியிட்டுக் கொண்டிருந்த நிலையில் சம்யுக்தா முதல் முறையாக youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து இருக்கிறார். அதில் விஷ்ணுகாந்த் தனக்கு அதிகமான பாலியல் டார்ச்சர் கொடுத்ததாக தெரிவித்து இருக்கிறார்.
மேலும், தாம்பத்திய விசயத்தில் விஷ்ணுகாந்த் தன்னிடம் நடந்து கொண்ட விதத்தால் தன்னால் ஐந்து நாட்கள் பாத்ரூம் கூட போக முடியவில்லை என்றும், தனக்கு வயிறு வலித்து பாத்ரூம் வந்தா கூட போக முடியாமல் தான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று தனக்குத்தான் தெரியும் என்றும், தான் விஷ்ணுகாந்த்தை கல்யாணம் செய்யும் போது வரைக்கும் தான் வெர்ஜின் ஆகத்தான் இருந்தேன் என்பது விஷ்ணுகாந்த்க்கும் தெரியும் அதை தன்னால் நிரூபிக்கவும் முடியும் என தெரிவித்து இருக்கிறார்.
ஆனால் விஷ்ணுகாந்த் சமீபத்தில் ஒரு பேட்டியில் தங்கள் திருமணத்திற்கு முன்பு இருவரும் லிவிங்கில் இருந்தோம் தங்களுக்கு எல்லாம் முடிந்து விட்டது என்று தெரிவுத்து இருந்தார். ஆனால் அது பச்சையான பொய். திருமணத்திற்கு பிறகு தான் தங்களுக்கு முதலிரவு நடந்தது என்றும், அதற்கு முன்பு அவரை பற்றி தனக்கு இந்த விஷயத்தில் எதுவும் தெரியாது என்றும், அப்படி தெரிந்திருந்தால் தான் கண்டிப்பாக திருமணத்திற்கு சம்மதித்திருக்கவே மாட்டேன் என தெரிவித்து இருக்கிறார்.
மேலும், அவருக்கு 24 மணி நேரமும் செக்ஸ் வேணும். விஷ்ணுகாந்த் எப்போதும் அந்த நினைப்பாக தான் தன்னிடம் நடந்து கொள்வார். அதற்கு தான் கம்பெனி கொடுக்கவில்லை என்பதால் தன்னை எப்படி எல்லாம் டார்ச்சர் செய்ய முடியுமோ அப்படி எல்லாம் பண்ணுவார் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
தற்போது சம்யுக்கதா தெரிவித்த குற்ற சாட்டு குறித்து ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் பலர் இத்தனை நாட்களாக அமைதியாக இருந்துவிட்டு எதற்காக இப்ப மட்டும் இத்தனை பெரிய குற்றச்சாட்டுகளை வைக்க வேண்டும் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும், விஷ்ணுகாந்த் எல்லா எவிடன்ஸ்களையும் உங்களுக்கு எதிராக வெளியிட்டதால இப்படி செய்கிறீர்களா? என்று கேள்வி கேட்டு வருகிறார்கள். இன்னும் ஒரு சில ரசிகர்கள் இந்த விஷயத்தில் ஒரு பெண் பொய் சொன்னாலும் இந்த அளவிற்கு ஒரு பொண்ணு பொய் சொல்ல மாட்டாங்க என்றும், சம்யுக்தா பட்ட வேதனையை தான் இப்போது சொல்லி இருப்பதாகவும், அதனால்தான் அவரால் 15 நாட்கள் கூட அவரோடு தாக்கு பிடிக்க முடியவில்லை என்று தெரிவித்து உள்ளனர். இவர்கள் பிரிந்ததற்கு இதுதான் உண்மையான காரணமாக இருக்குமோ என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.