பொம்பள சோக்கு கேக்குதா?.. வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த கணவரை பொளந்து கட்டிய பிக்பாஸ் பிரபலம்..!

Author: Vignesh
2 October 2023, 12:15 pm

சம்யுக்தா பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்டார் . அந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனார். இவர் யோகா கலைஞர், மாடல், தொழிலதிபர், நியூட்ரிசனிஸ்ட் என பல துறைகளில் பிரபலமான ஒருவர். பிக்பாஸ் முடிந்து சில மாத காலம் ஆனாலும் அதில் கலந்து கொண்ட பல பேருடன் தற்போதும் நட்பில் இருந்து வருகிறார். அதேபோல் இவருக்கு சில சினிமா பட வாய்ப்புகளும் வரத்துடங்கியுள்ளது .

சமீபத்தில் விஜய்சேதுபதி நடித்த “துக்ளக் தர்பார்” படத்தில் கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார் . தமிழில் 2019ம் ஆண்டிலிருந்து தான் நடிக்க துடங்கியுள்ளார் ஆனால் 2018 ம் ஆண்டே மலையாள படங்களில் நடிக்கத்துடங்கிவிட்டார் நடிகை சம்யுத்தா சண்முகம். விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான வாரிசு படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.

samyuktha-karthik-updatenews360

இதனிடையே, தனது சோசியல் மீடியாக்களில் கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர் பட்டாளத்தை அதிகரித்துக்கொண்டே இருக்கிறார். நாளுக்கு நாள் மாடர்ன் உடையில் கட்டழகு தெரிய கவர்ச்சி புகைப்படங்களை தெறிக்க விடுகிறார்.

samyuktha-karthik-updatenews360

இதனிடையே, சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சம்யுத்தா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை பகிர்ந்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கொரோனா பரவல் காலகட்டத்தில் தன்னுடைய கணவர் துபாயில் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் நான்கு வருடமாக உறவில் இருந்ததாகவும், அந்த விஷயம் தனக்கு தெரியவந்து தனது கணவரை எச்சரித்ததாகவும், அந்த சமயத்தில் தனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஒருவர் வேறு ஒரு பெண்ணிடம் உறவில் இருக்கிறார் என்றால், உங்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொள்வார். இவரும் தன்னிடம் அப்படித்தான் நடந்து கொண்டார். தற்போது கூட அந்த பிரிவில் இருந்து நான் வெளியே வர முடியாமல் தவித்து வருகிறேன் என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 799

    0

    0