என்னடா Marriage’ம் பண்ணி வைக்கறீங்க Divorce’ம் பண்ணி வைக்கிறீங்க? சர்ச்சை ஜோடியின் செம காமெடி வீடியோ!

Author: Shree
23 May 2023, 6:53 pm

சீரியல் நடிகை சம்யுக்தா திருமணம் ஆன ஒரு மாதத்தில் சமூக வலைதளங்களில் திருமண புகைப்படங்களை நீக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, அண்மை நாட்களாக சீரியலில் இணைந்து நடிக்கும் ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் இணைவது வழக்காக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சிற்பிக்குள் முத்து சீரியலில் நடித்து வந்த நடிகை சம்யுக்தா அதே சீரியலில் நடித்த விஷ்ணுகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தாவின் திருமணம் தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது. இந்த நிலையில், ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதனிடையே, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ள நிலையில், இருவரும் சமூகவலைதளங்களில் ஒருவர் மீது ஒருவர் கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர். இதனிடையே, பேட்டி ஒன்றில் பேசிய விஷ்ணுகாந்த், தங்களின் பிரிவுக்கு காரணம் சம்யுக்தாவின் தந்தை தான் என தெரிவித்திருந்தார். மேலும், இதற்கு மேல் எதுவாக இருந்தாலும் போலீஸ் ஸ்டேஷன் அல்லது கோர்ட்டில் பேசி கொள்ளலாம் என்றும் சம்யுக்தா வீடியோவில் கூறினார்.

இப்படி வாழ்ந்த ஒரு மாதத்தில் அவர்கள் privacy விவகாரம் வரைக்கும் வெளிப்படையாக கூறி முகம் சுளிக்க வைத்தார். இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாக நெட்டிசன்ஸ் அவர்கள் காதலித்தபோது காதல் பொங்க பேசிய ரொமான்டிக் வீடியோவுடன் இணைத்து பங்கமாக ட்ரோல் செய்து வருகிறார்கள். அந்தவகையில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செஃப் தாமு முன்னிலையில் மாலை மாற்றி ப்ரொபோஸ் செய்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்ஸ், ” என்னடா Marriage’ம் பண்ணி வைக்கறீங்க Divorce’ம் பண்ணி வைக்கிறீங்க?” என கலாய்த்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!