ஆட சொன்னா என்னமா பண்ற…புஷ்பா 2 பாடலுக்கு ஆட்டம் போட்ட பிக் பாஸ் பிரபலம்..கலாய்த்த நெட்டிசன்கள்!!
Author: Selvan21 December 2024, 5:34 pm
சனம் ஷெட்டியை கலாய்த்த ரசிகர்கள்
நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ராஸ்மிகா மந்தனா நடிப்பில் வெளிவந்த புஷ்பா 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சக்கை போடு போட்டு வருகிறது.
சமீபத்தில் படத்தின் பாடல்களின் வீடியோ வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.அதிலும் குறிப்பாக பீலிங்ஸ் மற்றும் கிஸ்ஸிக் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது.
நிறைய பேர் இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்து சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படியுங்க: நடிகர் பப்லுவின் முன்னாள் காதலிக்கு திடீர் கல்யாணம்…பிரிந்ததுக்கு இதான் காரணமா ..!
அந்த வகையில் பிக் பாஸ் பிரபலமான நடிகை சனம் ஷெட்டி கவர்ச்சி உடையுடன் பீலிங்ஸ் பாடலுக்கு நடனம் ஆடி,தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் ஏமா இதெல்லாம் ஒரு ஆட்டமா,ராஸ்மிகா மாதிரி டிரஸ் போட்டா மட்டும் பத்தாது,ஒழுங்கா டான்ஸும் பண்ணனும் என கலாய்த்து வருகின்றனர்.