தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் என்ன தான் இயக்குனராக இருந்தாலும் அவரது உதவியால் சினிமாவில் நுழைந்தாலும் ஆரம்பத்தில் அவர் எதிர்கொண்ட விமர்சனங்கள், கேலி கிண்டல் எல்லாத்தையும் பார்த்து நொந்து சினிமாவை விட்டு ஓடிப்போய்விடலாம் என அழுதாராம். பிரபல பத்திரிக்கை ஒன்று நாளைய தீர்ப்பு படத்தில் விஜய் ஹீரோவாக கமிட்டாகி நடித்துக்கொண்டிருந்தபோது ” யாருடா இவன் லாரி டயர்ல மாட்டின தகர டப்பா மாதிரி மூஞ்சிய வச்சிட்டு இவனெல்லாம் நடிக்க வந்துட்டான் என மிகவும் மோசமாக கீழ்த்தரமாக விமர்சித்தார்கள்.
மேலும் விஜய்க்கு நடிக்கவே தெரியவில்லை என நிராகரிக்கப்பட்டராம். ஆனால், அந்த அவமானத்தை எல்லாம் பாடமாக ஏற்றுக்கொண்டு தொடர்ந்து தனது திறமைகளை வளர்த்துக்கொண்டு இன்று தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக சிறந்து விளங்கிக்கொண்டிருக்கிறார். ஆரம்ப கால விமர்சனங்களை புறந்தள்ளி இன்று நடனம், நகைச்சுவை, ரொமான்ஸ், ஆக்ஷன் என அனைத்திலும் கில்லியாக இருக்கும் இருக்கிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தனது 49வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் பிரபலங்கள் என எல்லோரும் தங்களது வாழ்த்துக்களை கூறினார்கள். அந்தவகையில் நடிகை சனம் ஷெட்டி, விஜய்யின் உருவத்தை வரைத்து #leofirstlook என்ற ஹெஸ் டேக்கையும் குறிப்பிட்டு அவருக்கு வாழ்த்து கூறியிருந்தார்.
இதனை பார்த்த நெட்டிசன்ஸ் அவரது ஓவியத்தை மிகவும் மோசமாக விமர்சித்து கிண்டல் அடித்தனர். சிலர் தயவுசெய்து இதை டெலீட் செய்துவிடுங்கள் என கூறினார்கள்.இன்னொரு முறை பென்சிலை கையில் எடுக்காதீர்கள் என்று கூறி திட்டித்தீர்த்துள்ளனர் ரசிகர்கள். எவ்வளவு தைரியம் இருந்தால் இதை லியோ பர்ஸ்ட் லுக் என்று சொல்வீர்கள் எஎன்றெல்லாம் கடுப்பாகி திட்டியுள்ளனர்.
இதற்கு பதிலடி கொடுத்த அவர், ‘ என்ன மக்களே ஒரு ஸ்கெட்சுக்கே இவ்வளவு ரியாக்ஷனா, வைரல் ஆக்கிட்டீங்களே. ஸ்கெட்சுக்கே விஜய் சார் ரசிகையா இருந்து இந்த ட்ரோல்ஸ்க்கு எல்லாம் கவலைப்பட மாட்டேன். விஜய் எதிர்கொண்ட விஷயத்திற்கு முன்னாள் இதெல்லாம் ஒன்றுமே கிடையாது. அனைத்து கருத்துக்களும் வரவேற்கப்படுகிறது. அதனால் அடுத்த ஸ்கெட்ச் வரை சில் பண்ணுங்க. இருப்பினும் என்னுடைய முயற்சியை பாராட்டியவர்களுக்கு நன்றி ‘ என்று பதிவிட்டுள்ளார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.