தர்ஷன் கைது: எனக்கு ரொம்ப சந்தோஷம், ஆனா?- வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய சனம்!

Author: Prasad
5 April 2025, 12:25 pm

பிக்பாஸ் தர்ஷன் திடீர் கைது…

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் தர்ஷன். இலங்கையை பூர்வீகமாக கொண்ட தர்ஷன் மாடலிங் துறையில் மிகப் பிரபலமானவராக வலம் வந்தார். 2017 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்த அவர் போத்தீஸ், நண்டு பிராண்டு லுங்கிகள் போன்ற பல விளம்பர படங்களில் நடித்து வந்தார். இதனை தொடர்ந்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது அவரை தமிழர்களிடையே பிரபலமாக்கியது. 

sanam shetty released video on tharshan arrest

இந்த நிலையில் தர்ஷன் நேற்று போலீஸாரால் கைது செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது தனது வீட்டின் முன் பாதையை அடைத்தபடி ஒரு கார் பார்க்கிங் செய்யப்பட்டிருந்ததால் கார் உரிமையாளருக்கும் தர்ஷனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் கைக்கலப்பாக மாறியது. 

இந்த வாக்குவாதத்தில் தர்ஷனின் தம்பியின் முகத்தில் எதிர்தரப்பினர் சூடான காபியை ஊற்றிவிட்டதாகவும் அதனால்தான் கைக்கலப்பு வரை இந்த விவகாரம் சென்றதாகவும் தர்ஷன் தரப்பு கூறுகிறது. கார் உரிமையாளர் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் என்று தெரிய வருகிறது. அவரின் கர்ப்பமான மனைவியை தர்ஷன் தாக்கியதாக எதிர்தரப்பினர் கூறுகின்றனர். இந்த பிரச்சனையில் கார் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் தர்ஷன் நேற்று கைது செய்யப்பட்டார். 

வீடியோ வெளியிட்ட சனம் ஷெட்டி

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை சனம் ஷெட்டி, தர்ஷனின் முன்னாள் காதலி. இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால் தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்தபிறகு அவர் என்னை திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார் என்று சனம் ஷெட்டி புகார் அளித்திருந்தார். 

தற்போது தர்ஷன் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் சனம் ஷெட்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “பிக்பாஸ் தர்ஷனை கைது செய்துவிட்டது குறித்த செய்திகளை எனது நண்பர்கள் எனக்கு வாட்ஸ் ஆப் மூலம் பகிர்ந்தார்கள். நான் மனதை தொட்டுச் சொல்கிறேன். அந்த செய்தியை பார்த்தபோது முதலில் எனக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது. அவரிடம் இருந்து நான் நிறைய துரோகங்களை அனுபவித்துவிட்டேன். ஆதலால் எனக்கான ஒரு நியாயம்தான் இது என எனக்கு தோன்றியது. 

sanam shetty released video on tharshan arrest

நானும் ஒரு சாதாரண பெண்தானே, எனக்கும் எமோஷன்ஸ் எல்லாம் இருக்கிறது. ஆனால் எனக்கு சில மதிப்புகளும் உள்ளது. இன்னொருத்தருக்கு நடக்கும் அநியாயத்தில் என்னுடைய நியாயத்தை நான் தேட முடியாது. எனக்கு நானே ஒரு கேள்வியை கேட்டுக்கொண்டேன். தர்ஷனின் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் அவர்களுக்காக நான் குரல் கொடுத்திருப்பேனா இல்லையா என்று கேட்டேன். நிச்சயமாக நான் கொடுத்திருப்பேன். 

என் மனசாட்சிக்கு எதிராக ஒரு விஷயத்தை செய்தால் எனக்கு இரவு தூக்கம் வராது. நான் யாருக்கும் வேண்டுமென்றே கெடுதல் நினைத்தது இல்லை. எனக்கு தர்ஷன் விவகாரத்தில் ஒரு சந்தேகம் இருக்கிறது. ஒரு ஜுஜுபி பார்க்கிங் சண்டையில் ஒரே நாளில் கைது செய்யப்பட்டிருக்கிறார் தர்ஷன். இவ்வளவு வேகமா சட்டம் வேலை செய்யுமா என்ற பெரிய சந்தேகம் எங்களுக்கு வருமா இல்லையா? 

வார இறுதியான வெள்ளிக்கிழமை அன்று கைது செய்யப்பட்டிருக்கிறார். விசாரணை திங்கட்கிழமையில்தான் தொடங்கும். அதற்கு முன்பே இவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். எதிர்தரப்பினர் இன்னும் சிசிடிவி காட்சிகளை வெளியிடவில்லை. ஆதலால் இந்த பிரச்சனைக்கு பின்னால் இருக்கும் உண்மை நிச்சயமாக வெளிவரவேண்டும்” என அந்த வீடியோவில் பேசியுள்ளார் சனம். 

https://www.instagram.com/p/DIBy2V4yEXk

  • shakeela talks shruthi narayanan video that is original video அது ஒரிஜினல் வீடியோதான்-ஸ்ருதி நாராயணனை குறித்து பகீர் கிளப்பிய ஷகீலா…
  • Leave a Reply

    Close menu