சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

Author: Selvan
23 February 2025, 3:57 pm

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன

விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா ஆக்ஷன் படமாக வெளியாகி ஹிட் அடித்தது,இப்படத்தில் விஷாலுடன் ராஜ்கிரண்,மீரா ஜஸ்மீன்,கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்திருந்தனர்,யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

இதையும் படியுங்க: அதிரடியாக பெயரை மாற்றிய பிரபல நடிகர்..படத்தின் டீசரை கவனித்தீர்களா.!

சண்டக்கோழி படத்தில் முதலில் நடிகர் விஜயை நடிக்க வைக்க லிங்குசாமி முயற்சித்துள்ளார்,படத்தின் முதல் பாதி கதையை கேட்டவுடன் போதும்னு என்ன நிறுத்த சொல்லி ராஜ்கிரண் மாதிரி ஒருத்தர் உள்ளே வந்த பிறகு எனக்கு இதுல என்னனா இருக்குனு சொல்லி நடிக்க மறுத்துவிட்டார்,அதன் பிறகு நடிகர் சூர்யாவை அணுகியுள்ளார்,அவரும் நடிக்க மறுக்கவே விஷாலை வைத்து படத்தை எடுத்து ஹிட் கொடுத்தார்.

படம் வெளியான பிறகு ஒரு நிகழ்ச்சியில் விஜய் சாரை பார்த்தேன்,அப்போது அவரிடம் நீங்கள் என்னிடம் இரண்டாம் பாதி கதையை கேட்கவே இல்லையே என்று கூறினேன்,அதற்கு அவர் அந்தப் பையனுக்கு இந்த வாய்ப்பு வரணும்னு இருந்திருக்கு,க்ளைமாக்ஸ் காட்சிகளில் நடிப்பில் அசத்திவிட்டார் என்று கூறினார் என லிங்குசாமி சமீபத்திய பேட்டி ஒன்றில் சண்டக்கோழி திரைப்படத்தை பற்றி பகிர்ந்திருப்பார்.

மேலும் நடிகர் விஜய்,அஜித் நடித்த தீனா,அர்ஜுன் நடித்த முதல்வன்,விக்ரம் நடித்த தூள், சூர்யா நடித்த சிங்கம் போன்ற படத்தையும் மிஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • pavni reddy condition on amir for marriage மதம் மாறச் சொன்ன அமீர்? பாவனி போட்ட ஒரே ஒரு கண்டிஷன்! இப்படி எல்லாம் நடந்திருக்கா?