பிரபல சீரியலில் இருந்து விலகிய நடிகர்…இன்ஸ்டா பதிவால் சோகத்தில் ரசிகர்கள்…!

Author: Selvan
19 December 2024, 5:34 pm

சந்தியா ராகம்-சீரியலில் சுர்ஜித் குமார் விலகல் ரசிகர்கள் அதிர்ச்சி!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட சந்தியா ராகம் சீரியல்,ரொமான்டிக் மற்றும் குடும்ப கதையுடன் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது.

Surjith Kumar Instagram post on leaving Sandhiya Raagam

இந்த தொடரில் கதாநாயகனாக நடித்து வந்த சுர்ஜித் குமார் மிகப் பிரபலம் ஆகி ரசிகர்களை கவர்ந்தார் .ஆனால் தற்போது, அவர் திடீரென இந்த தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதையும் படியுங்க: தூக்கிவிட்டவரை தூக்கி வீசிய விக்ரம்…இயக்குனர் பாலாவுடன் இப்படி ஒரு பகையா..!

சுர்ஜித், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த முடிவை பகிர்ந்துள்ளார். அதில், “கடவுள் எல்லாவற்றையும் ஒரு காரணத்திற்காக செய்கிறார்.என் சந்தியா ராகம் குடும்பத்தை விட்டு விலக உள்ளேன்.என்னுடைய நிஜ குடும்பத்திற்காக எடுக்கப்பட்ட முடிவு இது” என கூறியுள்ளார்.

மேலும் ,அவர் இயக்குனர், தயாரிப்பாளர், ஜீ தமிழ் மற்றும் தனது பயணத்தில் இருந்த அனைத்து நடிகர்கள்,தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்திருக்கிறார்.

நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்.உங்களிடம் இருந்தும் இதே மாதிரியான அன்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்”என்று கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Jai was a play boy அவன் சரியான ஊமக் குசும்பன்.. செம PLAY BOY : ஜெய் குறித்து கவர்ச்சி நடிகை ஓபன்!