தியேட்டரில் நடந்த கோர சம்பவம்… ₹25 லட்சம் கொடுத்த அல்லு அர்ஜூன்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 December 2024, 11:43 am

ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 சிறப்பு காட்சி நடைபெற்ற போது, நடிகர் அல்லு அர்ஜுன் தனது ரசிகர்களுடன் நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொண்டார். அவரது வருகையால் பரபரப்பும், கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. இது காரணமாக போலீசார் லத்தி வீச்சு நடத்தினர்.

இந்த குழப்பத்தில் துரதிர்ஷ்டவசமாக ஒரு பெண் உயிரிழந்தார், மேலும் அவரது 9 வயது மகன் காயமடைந்தார்.

இதையும் படியுங்க: நாக சைதன்யா வாழ்க்கையில் மீண்டும் புயல்… சோபிதாவால் வெடித்த பிரச்சனை!

இந்த சம்பவம் பொதுமக்களிடையே கடும் விமர்சனத்தை எழுப்பியது. பலரும் அல்லு அர்ஜுன் மற்றும் அவரது பாதுகாப்பு குழுவின் நடவடிக்கைகளை விமர்சித்தனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்ட அல்லு அர்ஜூன், இந்த துயரமான சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டார்.

அவர் தனது ஆழ்ந்த மனவேதனையை வெளிப்படுத்தி, அந்தப் பெண்ணின் குடும்பத்துடன் உணர்ச்சிப்பூர்வமாக இணைந்துள்ளதாக கூறினார்.

மேலும், குடும்பத்துக்கு உதவியாக ₹25 லட்சம் வழங்குவதாகவும், அனைத்து மருத்துவ செலவுகளையும் பொறுப்பேற்கத் தயார் எனவும் அறிவித்தார்.

  • A.R. Rahman Health Update அப்பாவுக்கு வேற பிரச்சனை…ஏ.ஆர்.ரகுமான் மகன் அமீன் பதிவு..!