விஜய் கன்னத்தில் அறைந்த பிரபல நடிகை; அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்,..

Author: Sudha
21 July 2024, 11:54 am

கோயமுத்தூர் மாப்ளே 1996 ஆம் ஆண்டு விஜய் மற்றும் சங்கவி நடிப்பில் வெளியான காதல், நகைச்சுவை கலந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.சி. ரங்கநாதன் இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் இப்படம் வெளியானது. வியாபார ரீதியாக வெற்றியும் பெற்றது.தெலுங்கில் அமலாபுரம் அல்லுடு என்றும் இந்தியில் ராம்புரி டமாட் என்றும் மொழிபெயர்க்கப்பட்டு 2007 ஆம் ஆண்டு வெளியானது.

கோயமுத்தூர் மாப்பிள்ளை திரைப்பட படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை பகிர்ந்து உள்ளார் நடிகை சங்கவி. கோயமுத்தூர் மாப்பிள்ளை திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும் எனும் பாடலை படமாக்கும் பொழுது அந்த பாடலில் சங்கவியின் சேலையானது காற்றில் பறக்கும் அப்போது அது அங்கு இருக்கும் நெருப்பில் படுவதைப்போலவும் விஜய் அதை எடுப்பதைப் போலவும் உடனே சங்கவி செல்லமாக விஜயின் கன்னத்தில் தட்டுவதை போலவும் காட்சியைப் படமாக்க திட்டமிடப்பட்டது.

ஆனால் அந்த நேரத்தில் காட்சி நிறைய ரீடேக் எடுத்தது. நெருப்பும் சரியாக எரியவில்லை சேலையும் அந்த காற்றில் சென்று நெருப்பில் படுவதைப் போன்று ஒரு காட்சியை படமாக்க முடியவில்லை, முடிவில் அந்த காட்சியில் செல்லமாக விஜய்யின் கன்னத்தில் அடிப்பதைப் போன்ற காட்சியில் நிஜமாகவே விஜய்யின் கன்னத்தில் நிஜமாகவே அடித்ததாக சொல்லி இருக்கிறார் சங்கவி.நானும் விஜய்யும் நல்ல நண்பர்கள் இதை விஜய்யும் சாதாரணமாக எடுத்துக் கண்டார் என திரைப்பட அனுபவத்தை பகிர்ந்தார் சங்கவி.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!