16 பெண்களை ஏமாற்றிய ஆர்யா? எங்க வீட்டு மாப்பிள்ளையின் சீக்ரெட்டை உடைத்த சங்கீதா..!

Author: Vignesh
22 January 2024, 6:24 pm

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஆர்யா இவர் கடந்த 2017 நடிகை சாய்ஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் 17 வயது வித்தியாசத்தில் காதல் திருமணம் குடும்பத்தினர் சம்பந்தத்துடன் நடைபெற்றது. நடிகை சாய்ஷாவை திருமணம் செய்வதற்கு முன் நடிகர் ஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பதினாறு பெண்களில் ஒருவரை தான் திருமணம் செய்யப் போகிறார் என்று சொல்லப்பட்டு வந்தது.

அதில் மூன்று பெண்கள் இறுதி சுற்றுக்கு தேர்வான நிலையில், ஒருவரை திருமணம் செய்தால் மற்ற இருவரும் கஷ்டப்படுவார்கள் என்று கூறி யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் ஆர்யா ஏமாற்றி விட்டார். இந்த சம்பவம் பெரிய சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், நிகழ்ச்சியின் முழுவதும் தொகுத்து வழங்கிய நடிகை சங்கீதா தற்போது அது குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

enga veetu mapillai

ஆரம்பத்தில், நிகழ்ச்சி குழுவினரிடையே நிஜமாகவே ஆர்யா இதை செய்கிறாரா என்று ஆயிரம் முறை கேட்டிருப்பேன். அதற்கு நிகழ்ச்சி குழுவும், ஆமாம் அவர் அக்ரிமெண்ட் எல்லாம் கையெழுத்து போட்டு இருக்கிறார் என்று கூறினார்கள். அதேபோல், ஆர்யாவிடம் உண்மையாகவே இதை செய்கிறாயா என்று கேட்டேன் ஆமாம், நிறைய ரிஜெக்ஷன் தோல்விகள் இருந்ததால் எனக்கு இது பிடித்திருக்கிறது என்று அவரும் கூறினார்.

enga veetu mapillai

அதன்பின், இறுதியில் யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் அவரால் முடிவெடுக்க முடியவில்லை. ஏனென்றால், ஆரம்பத்தில் நகைச்சுவையாக ஆரம்பித்து கடைசியில் அந்த நிகழ்ச்சி எமோஷனல் ஆக மாறிவிட்டது. இது தப்பாக மாறிவிடும் என்று ஆர்யா மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அதற்கு மேல் அவரை கட்டாயப்படுத்த முடியாது என்று நினைத்தேன். அவர் முடிவு எங்களுக்கு தேவை பதில் சொல்லி ஆகணும் என்று நிகழ்ச்சி குழு என்னிடம் கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

enga veetu mapillai

ஆனால், அவர் முடிவில் ஸ்ட்ராங்காக இருந்ததால் அவர் முடிவை அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள் என்று சங்கீதா தெரிவித்துள்ளார். மேலும், பேசுகையில் நிகழ்ச்சி ஆரம்பத்தில் குழுவினரிடம் நான் பேசிய விஷயம் எதுவாக இருந்தாலும், நீங்களே உருவாக்கி போலியாக இருந்தால், நான் இதில் ஒரு பங்காவாக இருக்க மாட்டேன். மக்களை ஏமாற்றுவது எனக்கு பிடிக்காது. அதை செய்ய மாட்டேன் என்று தெளிவாக கூறி அந்த நிகழ்ச்சியில் ஒப்பந்தமானேன் என்று நடிகை சங்கீதா ஓப்பனாக பேசியுள்ளார்.

  • Vanangaan Suriya Movie இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு.. பாலா சொன்ன காரணம்.. Satisfied ஆகாத சூர்யா Fans!
  • Views: - 480

    0

    0