ரெடின் கிங்ஸ்லி உடன் விவாகரத்து?.. கட் அண்ட் ரைட்டாக சொன்ன சங்கீதா..!
Author: Vignesh22 January 2024, 11:45 am
தமிழ் சினிமாவில் மிகக்குறுகிய காலத்திலேயே பரவலான மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான காமெடியனாக பார்க்கப்படுபவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. இவர் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ‘டாக்டர்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். வசன உச்சரிப்பு வித்தியாசமான உடல் மொழி என தனது நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்த ரெடின் கிங்ஸ்லி விஜய் நடிப்பில் உருவாகிய ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக ரெடின் கிங்ஸ்லி பற்றிய செய்தி தான் கோலிவுட்டின் தலைப்பு செய்தியாக பேசப்பட்டு வருகிறது. ஆம். இவர் மாஸ்டர் படத்தில் விஜய்யின் தோழியாக நடித்த நடிகை சங்கீதாவை இவர் திருமணம் செய்துக்கொண்டார். அதையடுத்து இந்த புதுமண ஜோடி தங்களின் தேனிலவு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அனைவரது பார்வையும் ஈர்த்துள்ளனர்.

நியூ இயர் ஸ்பெஷலாக ரெடின் கிங்ஸ்லி – சங்கீதா தம்பதியினர் ஜோடியாக எடுத்துக் கொண்ட போட்டோ வைரலான நிலையில், பசு மாட்டுடன் நின்று கொண்டு புகைப்படம் எடுத்தும் மனைவி சங்கீதாவுக்கு நச்சுன்னு முத்தம் கொடுத்த புகைப்படத்தையும் ரெடின் கிங்ஸ்லி வெளியிட்டு இருந்தனர்.
இந்நிலையில், நடிகை சங்கீதா சென்னை தாம்பரத்தில் நடந்து வரும் டபுள் டக்கர் என்ற அருங்காட்சியத்திற்கு பிரமோட் செய்ய சென்றுள்ளார். அவருடன் தங்கதுரை மற்றும் லொல்லுசபா மாறன் போன்றவர்களுடன் சென்ற சங்கீதா பத்திரிக்கையாளர்களையும் சந்தித்து பேசி உள்ளார்.
உங்களுடன் ரெடின் கிங்ஸ்லி ஏன் வரவில்லை உங்களுக்கும் அவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. அது உண்மையா என்று கேள்வி கேட்டதற்கு பதில் அளித்த சங்கீதா அவர், எப்போதும் ஷூட்டிங்கில் தான் அவர் இருப்பார். கல்யாணமான முதல் இப்போது வரை ஷூட்டிங் தான் இருக்காரு இன்னைக்கு காலையில், 8:00 மணிக்கு வீட்டுக்கு வந்தாரு மதியம் கிளம்பி போயிட்டாரு கல்யாணம் பண்ணுவதற்கு முன்பு அவருக்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்பு வந்தது.
நான் என் வேலையில் பிஸியாக இருக்கிறேன். அவர் வேலையில், அவர் பிஸியாக இருக்காரு இருவரும் சேர்ந்து நேரத்தை செலவிடுவது கம்மிதான். ஆனால், அது தெரிந்தும் தான் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். ஆனால், அது இரவு நேரத்தில் கூட ஷூட்டிங் செல்வது எனக்கு பிரச்சனை எதுவும் இல்லை என்று கட் அண்ட் ரைட்டாக சங்கீதா தெரிவித்துள்ளார்.