இணையத்தில் சமீப நாட்களாக தீயாய் பரவிக் கொண்டிருக்கும் செய்திதான் விஜய் தனது மனைவி சங்கீதாவை பிரிந்து வாழ்கிறார் என்று.
நடிகர் விஜய்க்கும் அவருடைய மனைவி சங்கீதாவிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் சங்கீதா வெளிநாட்டில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்கு மகன் மற்றும் மகளுடன் சென்றுவிட்டார் என்றும் தகவல் வெளியாகி சோசியல் மீடியாவை பதம் பார்த்தது.
அதுமட்டுமல்லாமல், நடிகையின் மேல் உள்ள காதல்தான் காரணம் என்றும், அந்த நடிகையுடன் விஜய்க்கு தவறான உறவு உள்ளது என்றும், இதை அறிந்து தான் சங்கீதா சென்று விட்டதாக சர்ச்சைக்குரிய தகவல் பரவியது.
ஆனால், அது உண்மையில்லை. அந்த நடிகை தனது நீண்ட கால காதலரை தான் இன்னும் 4 வருடங்கள் கழித்து திருமணம் செய்துகொள்ள போகிறார் என தகவல் வெளிவந்தது.இதன்பின் அந்த நடிகைக்கும் விஜய்க்கும் இடையே எந்த ஒரு தவறான உறவும் இல்லை என கூறப்பட்டது.
இந்நிலையில், நடிகர் விஜய்க்கும், அவருடைய மனைவி சங்கீதாவிற்கும் இடையே எந்த ஒரு பிரச்சனையும் இல்லையாம். விஜய்யும் அவருடைய மனைவி சங்கீதாவும் சென்னையில் உள்ள வீட்டில் தான் இருக்கிறார்கள்.
சங்கீதா வெளிநாட்டில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்கு செல்லவில்லை என பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். இதன்முலம் பலநாள் சர்ச்சைக்கு ஒரு முடிவு கிடைத்துள்ளது.
இதனிடையே, நடிகர் விஜய்யை அவரது மனைவி சங்கீதா கடுமையாக திட்டிய சம்பவம் குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் சாந்தனுவின் திருமணத்தில் நடிகர் விஜய் கலந்துகொண்டது மட்டுமல்லாமல், அவர் கையால் தாலி எடுத்துக் கொடுத்துள்ளாராம்.
முன்னதாக, விஜய் தாலி எடுத்து கொடுத்து தான் சாந்தனு, கீகீ திருமணம் நடைபெற்று உள்ளது. இதனை விஜய் தனது மனைவி சங்கீதாவிடம் வீட்டிற்கு சென்றவுடன் தெரிவித்த, நிலையில், இதை கேட்டவுடன் சங்கீதா திருமணத்தில் தாலி எடுத்துக்கொடுப்பது என்பது பெரியவர் செய்யவேண்டிய விஷயம் என்றும், நீங்க ஏன் செஞ்சீங்க என விஜய்யை திட்டினாராம் சங்கீதா. இந்த விஷயத்தை சாந்தனு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
வெறித்தனமான டிரைலர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
கோவை தடாகம் சாலையில் உள்ள அவிலா கான்வெண்ட் என்ற தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை சரி…
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக இன்று வரை பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகள் நீடித்து வருகின்றன. 2019ஆம்…
இயக்குனர் டூ காமெடி நடிகர் அஜித்தின் “ரெட்”, சூர்யாவின் “மாயாவி” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் சிங்கம்புலி. எனினும் இத்திரைப்படங்களை தொடர்ந்து…
This website uses cookies.