பிரபல இயக்குனரை சந்தோஷப்படுத்த அதை செய்தேன்.. கூச்சமின்றி பேசிய சங்கீதா..!

Author: Vignesh
13 August 2024, 4:57 pm

90 காலகட்டத்தில் பிரபல நடிகையாக திகழ்ந்து வந்த சங்கீதா தற்போது, குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர் பிதாமகன் படத்தில் இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்தது குறித்து பகிர்ந்துள்ளார்.

அப்போது நான் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்த போது கிட்டத்தட்ட ஒன்பது படங்கள் கைவசம் இருந்தது. ஆனால், எனக்கு தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்பு இல்லாமல் இருந்தது. அதனால், இங்கே சூர்யா விக்ரம் எல்லாம் பெரிய ஹீரோக்களாக இருக்கிறார்கள் என்பது தெரியாமல் இருந்தது.

அப்போதுதான், பிதாமகன் படத்தில் நடிக்க கேட்டார்கள். ஆனால், தேதி பிரச்சினை காரணமாக அந்த படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து பல நடிகைகளை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் செய்த அவர்களை சூட்டிங் ஸ்பாட்டுக்கு வரவழைத்து நடிக்க வைத்து திருப்தி இல்லாமல் அனுப்பி விட்டனர்.

சிறந்த நடிகைக்கான விருது வாங்கினேன். என் குரு வம்சி சார் அடுத்து என்னை செய்ய போகிறாய் என்று கேட்டதும் அடுத்தடுத்து படங்களில் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், நான் நடிக்க முடியாமல் போய்விட்டதாக சொன்னேன். அதற்காக சடார் என்று கோபப்பட்டு பாலா சார் படத்தை நீ எப்படி மிஸ் செய்வ உடனே அவருக்கு போன் செய்து மன்னிப்பு கேள் என்று கூறினார்.

பின்னர் உடனே நான் தேதிகள் இல்லை. அதனால், தான் அப்படி சொன்னேன் என்று சொன்னவுடன் பாலா படத்தில் நடிக்க உன்னை கேட்டதால் நீ தான் தேதிகளை உருவாக்க வேண்டும் என்று அவர் கடிந்து கொண்டார். பின்னர் பாலா சாருக்கு கால் செய்து விருது வாங்கி இருப்பதை கூறினேன். அதற்கு அவர் அலட்சியமாக பதில் அளித்தார்.

வம்சி சார் என்னை கூப்பிட்டு கண்டித்ததை அவரிடம் சொல்லி படத்தில் வாய்ப்பு கொடுங்கள். வேலை கற்றுக் கொடுங்கள். உங்கள் கையால் வேலை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன் என்று சொன்னேன். உடனே என்ன செய்கிறாய் என்று கேட்டதும் பாலா கிருஷ்ணா சார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்றோன். பின்னர் அவர் கூப்பிட்டு சென்றதும் படத்தில் மேக்கப் கிடையாது என்று முன்பே சொல்லிவிட்டார்கள்.

என்னை அழுக்காக்கி அழுக்கு புடவையை கொடுத்து அவர் முன்னால் கொண்டு வந்து நிப்பாட்டினார்கள். அதை பார்த்து அதிர்ச்சியான பாலா என்ன இந்த பொண்ணு இவ்வளவு பிரஷ்ஷா இருக்கு அவள் உடுத்தி இருக்கும் புடவையை மண்ணில் புரட்டிக் கொடுங்கள் என்றார்.

அப்போது, சூர்யா விக்ரமை பார்த்தபின் என்னைவிட கேவலமாக இருந்தார்கள். பாலா என்றால், நாங்கள் இப்படித்தான் என்று பழகிக்கொண்டோம். எங்களுடைய ஒரே இலட்சியம் அவரை சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற ஒற்றை புள்ளிதான் இருந்தது. ஒவ்வொரு காட்சியும் முடிந்த பின் மானிட்டரில் பார்த்து சூப்பர் என்று சொல்லிவிட்டால் எங்களுக்கு அப்படி ஒரு சந்தோஷம் என்று நடிகை சங்கீதா தெரிவித்துள்ளார்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!