தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக 2000 காலகட்டத்தின் இடைப்பகுதியில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை சங்கீதா. இவரது நடிப்பில் வெளிவந்த பிதாமகன் திரைப்படம் இன்றளவு மிகவும் ஃபேவரட்டான பலரது திரைப்படமாக பார்க்கப்பட்டு வருகிறது. பிதாமகன் திரைப்படத்தில் நடிகை சங்கீதா விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

இந்த திரைப்படத்தில் அவர்களின் நடிப்பு மிகப்பெரிய அளவில் அப்போதே பேசப்பட்டது. தொடர்ந்து உயிர், தனம் போன்ற திரைப்படங்களில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் சங்கீதா. இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பாடகர் கிரிஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு கிடைக்கும் சில திரைப்பட வாய்ப்புகளில் நடித்துக் கொண்டே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். சங்கீதா கிரிஷ் விஜய் குறித்து பேசி இருக்கிறார். அப்போது அவரை பேட்டி எடுத்த கலா மாஸ்டர்… விஜய் எப்படி உன்னிடம் ஜாலியா இருப்பாரா? என கேள்வி கேட்க…. உண்மையிலே விஜய் ரொம்ப ஜாலியான டைப் செமையா காமெடி பண்ணுவாரு.

செமையா எல்லோரையும் கலாய்ப்பாரு… எனவே எல்லோரும் சொல்ற மாதிரி விஜய் ரொம்ப நல்லவர். சைலன்டானவர் என்ற விஜய்யை நான் பார்த்ததே கிடையாது. சின்ன வயசுல இருந்து வாலு விஜய்யை தான் நான் பார்த்திருக்கிறேன். அவர் சின்ன வயசுல இருந்தே அப்படித்தான் இருந்தும் வளர்ந்தும் வந்தாரு. நிஜமாகவே.
விஜய் மிகவும் ஜாலியான டைப் தான் என சங்கீதா அந்த பேட்டியில் கூறியிருந்தார். எல்லோரும் விஜய் அமைதியானவர் மிகவும் சைலண்டாக சூட்டிங் ஸ்பாட்டில் இருப்பார் என்று தான் பேட்டி கொடுத்து கேள்விப்பட்டிருப்போம் சங்கீதா கிரிஷ் கூறியிருக்கும் இந்த விஷயம் எல்லோருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.