இயக்குனராக களமிறங்கும் லப்பர் பந்து நடிகை…குதூகலத்தில் கோலிவுட்..!
Author: Selvan27 January 2025, 6:55 pm
இயக்குனராக அடியெடுத்து வைக்கும் நடிகை சஞ்சனா
கடந்த வருடம் தமிழ் சினிமாவில் நிறைய சிறிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வந்து வசூலை வாரி குவித்தது.அந்த வகையில் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளிவந்த லப்பர் பந்து திரைப்படத்தில் கிராமத்தில் இரு ஊர்களுக்கு நடைபெறும் கிரிக்கெட் கதையை மிகவும் எதார்த்தமாக எடுத்திருந்தார்.
இதில் அட்டகத்தி தினேஷ்,ஹரிஷ் கல்யாண்,சுவாசிகா,சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தங்களுடைய அற்புதமான நடிப்பை வெள்ளிப்படுத்திருப்பார்கள்.
காதல்,குடும்பம்,விளையாட்டு,காமெடி,என பல வித உணர்ச்சிகளை மிக அருமையாக இயக்குனர் காட்டி இருப்பார்.இப்படத்தின் மெகா வெற்றி மூலம் படத்தில் நடித்த எல்லோருக்கும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து குவிந்து வருகின்றன.
இதையும் படியுங்க: தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொள்ளும் ஹெச்.வினோத்…பிரபலம் சொன்ன பகீர் தகவல்…!
இந்த நிலையில் படத்தில் கெத்து தினேசுக்கு மகளாக நடித்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி தற்போது இயக்குனராக அறிமுகம் ஆக உள்ளார்.இவர் ஏற்கனவே கமல்ஹாசனை வைத்து மணிரத்தினம் இயக்கும் தக் லைப் படத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்துள்ளார்.இவருக்கு ஆரம்பம் முதலே நடிப்பதை தாண்டி இயக்குனராக ஆக ஆசை இருப்பதால் தற்போது நடிகர் கவினை வைத்து ஒரு படம் இயக்க போவதாக தகவல்கள் பேசப்பட்டு வருகிறது.ககூடிய விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.