விஜய்யுடன் அப்படியொரு ரோல்.. வேண்டவே வேண்டாம்-ன்னு தெறித்து ஓடிய இளம் நடிகை..!
Author: Vignesh24 February 2024, 1:22 pm
சினிமாவை பொறுத்தவரை நல்ல நல்ல படங்களில் நடித்து தொடர் ஹிட் கொடுத்து மக்கள் மனத்தில் நல்ல ஒரு இடத்தை பிடித்துவிட்டால் நடிகர்களின் அடுத்தகட்ட வளர்ச்சியாக தேர்ந்தெடுக்கும் ஒரே விஷயம் “அரசியல் ” சினிமாவை தாண்டியும் அரசியல்வாதியாக இருப்பதும் நல்ல சக்ஸஸ் தான் கொடுக்கும் என்பதை நிரூபித்து காட்டியவர் எம்ஜிஆர். அவரது வளர்ச்சியையும் வெற்றிகளையும் பார்த்து வளர்ந்து வரும் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பல டாப் நடிகர்களுக்கு அரசியல் மோகம் வந்துவிட்டது.
அவர்கள் படங்களில் நடித்து பெயரை சம்பாதித்துவிட்டு அதைவைத்து அரசியலில் குதித்துவிட்டார்கள். அப்படித்தான் நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வரவேண்டும் என பல வருடங்களாக முனைப்புடன் இருந்து வந்தார். இப்போது தான் அதற்காக சரியான நேரம் வந்துள்ளது. விஜய் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், விஜய் கைவசம் இருக்கும் படத்தில் மட்டும் நடித்து சினிமாவிலிருந்து விலகி விடுவேன் என்று கூறியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது. அதன்பின்னர், விஜய் பற்றிய விஷயங்கள் தான் இணையதளத்திலும் தொலைக்காட்சி சேனலிலும் பேசுபொருளாக இருந்து வருகிறது. அந்த வகையில், நடிகர் விஜய் பற்றி பிரபலங்கள் பேசியது முதல் விஜயின் புகைப்படங்கள் மற்றும் பழைய பேட்டிகள் வரை இணையதளத்தில் வீடியோக்களாக வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.
அந்த வகையில், துப்பாக்கி படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்து பிரபலமான சஞ்சனா சாரதி அளித்த பேட்டி தற்போது, வைரல் ஆகி வருகிறது. துப்பாக்கி படத்திற்கு பின் வேறு ஒரு படத்தில் விஜயுடன் நடிக்க கேட்டார்கள். அந்த படத்தின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை என்றும், அந்தப்படத்திலும் விஜய் சாருக்கு தங்கையாக நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த கதாபாத்திரம் எனக்கு ரொம்பவே கம்மியான ஸ்கிரீன் என்பதால், நான் வேண்டாம் என்று கூறிவிட்டேன்.
எனக்கு நல்ல கதைக்கு முக்கியத்துவம் தரும் ரோலில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது என்ற காரணத்தால் தான் வேண்டாம் என்று கூறிவிட்டதாக சஞ்சனா சாரதி தெரிவித்துள்ளார்.