உன் வேலையை மட்டும் நீ பாரு.. பிரபல நடிகைக்காக மகனுடன் முறைத்துக் கொண்ட விஜய்..!
Author: Vignesh20 September 2023, 2:35 pm
தமிழ் சினிமாவின் முன்னணி டாப் ஹீரோ என்ற அந்தஸ்தில் இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா, கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரும் வரும் வித்தியாசமான, மரண மாஸாக கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்பதால் தான். அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரித்தது.
ஏற்கனவே திரிஷா விஜய் காதல் கிசுகிசுக்கப்பட்டிருக்கின்றனர். இப்போது லியோ படத்தினால் அது மீண்டும் துளிர்விட்டு எழுந்துள்ளது. விஜய் திரிஷாவுடன் நெருக்கமாக பழகி வருவதோடு அவ்வப்போது வெகேஷன் சென்று வருவதாக கூறப்படுகிறது.
அப்படித்தான் விஜய் திரிஷாவை ஒரு முறை வீட்டிற்கே அழைத்துச்சென்றுவிட்டாராம். அப்போது, விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கூட இருந்துள்ளார். அவரும் அப்பா விஜய்யை கடுமையாக திட்டிவிட்டாராம். ஏற்கனவே சங்கீதாவுடன் மனஸ்தாபம் இருக்கும்போது இவர் இப்படி செய்த காரியத்தை பார்த்ததும் மனம் உடைந்துப்போன சங்கீதா விவாகரத்துக்கு சம்மதம் தெரிவித்து ஜீவனாம்சமாக ரூ. 300 கோடி கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், விஜயை கண்டித்த மகன் சஞ்சயிடம் இது என் வீடு யார் வேண்டுமானாலும் வருவார்கள். அதைக் கேட்க நீ யார் என்று ஆக்ரோஷமாக பேசியுள்ளாராம். இதனை கண்டித்த காரணத்தால் தான் தந்தை SAC யை கூட விஜய் முறைத்துக் கொண்டாராம். மேலும், இதற்கெல்லாம் காரணம் விஜயின் உதவியாளர் ஜெகதீஷ் தான் என்றும், அவரை வேலை விட்டு துரத்த SAC ப்ளான் போட்டதாகவும், இதற்கு விஜய் ஜெகதீஷ் தான் தனக்கு முக்கியம் நீங்கள் முக்கியமில்லை என்று கூறி எஸ்ஏ சந்திரசேகரின் உறவை முறித்துக் கொண்டாராம்.
இதனிடையே, விஜயை பழிவாங்க தான் சஞ்சய் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளதாகவும், இதற்கு மனைவி சங்கீதாவும் உடன் இருந்து பார்த்து வருவதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், இந்த தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ரசிகர்கள் பலரும் இதனை ஷேர் செய்து வருகிறார்கள்.