விஜய்யை மிரட்டிவிட்டு காஷ்மீரில் இருந்து கிளம்பிய சஞ்சய் தத் – என்ன ஆச்சு?
Author: Shree17 March 2023, 7:53 pm
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். திரிஷா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார்.
ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் இப்படத்தின் ஷூட்டிங்கில் வில்லன் நடிகர் சஞ்சய் தத் கலந்துக்கொண்டார்.
இந்நிலையில் தற்போது சஞ்சய் தத் லியோ படத்தில் தன் பகுதி ஷூட்டிங்கை முடித்துவிட்டு காஷ்மீரில் இருந்து கிளம்பி இருக்கிறார். இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள படக்குழு, “அதில், “நன்றி சஞ்சய் தத் சார், நீங்கள் மிகவும் இனிமையாக இருந்தீர்கள். எங்கள் படக்குழுவினர் உங்கள் நடிப்பை அருகில் பார்த்து மகிழ்ந்தார்கள்.
எப்போதும் போல் நீங்கள் சிறப்பாக நடித்தீர்கள். உங்களை சென்னை படப்பிடிப்பில் சந்திக்க நாங்கள் காத்திருக்கிறோம். மீண்டும் சந்திப்போம் சார்” என்று குறிப்பிட்டுள்ளனர். ஆக அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்க உள்ளது உறுதியாகியுள்ளது.