நடிகர் விஜய்யின் மகன் சீசன் சஞ்சய் சினிமா மேக்கிங் படைப்பை முடித்துவிட்டு இயக்குனராக வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்து வந்தார். அதற்கான சரியான நேரத்திற்காக காத்துக்கொண்டிருந்த அவர் லைக்கா நிறுவனம் தறிக்கும் அடுத்த படத்தில் இயக்குனராக ஒப்பந்தமாகியுள்ளார். அதன் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகியது.
இவர் ஏற்கனவே, தனது தந்தை விஜய்யுடன் இணைந்து வேட்டைக்காரன் படத்தில் கூட நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய்க்கு தன் மகன் ஹீரோவாக வேண்டும் என்று தான் ஆசைபட்டாராம். அதற்காக ஷங்கர், முருகதாஸ், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட மிகப்பெரிய வெற்றி இயக்குனர்களிடம் பேசி ஒப்புதல் வாங்கிவிட்டாராம். ஆனால், மகன் சஞ்சய்யோ தனக்கு நடிப்பதில் கொஞ்சம் கூட ஆர்வமே இல்லை. இயக்குனராக தான் ஆவேன் என விடாப்பிடியாக நின்றார்.
இந்நிலையில் விஜயின் தந்தை தொழில் ரீதியான சந்திப்பு ஒன்றில் தான் தனக்கிருக்கும் செல்வாக்கை வைத்து பேரனுக்கு சான்ஸ் கொடுக்க சொல்லி கேட்டதாகவும் உடனே ஒப்புக்கொண்டதாம் லைக்கா நிறுவனம்.
முன்னதாக, விஜயின் துணையில்லாமல் சஞ்சய் தனது அறிமுக படத்தின் வாய்ப்பை கைப்பற்றியுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. அதை போல், தனது மகனின் படத்தைப் பற்றி பொதுவெளியில் விஜயும் பேசுவது இல்லை. இந்நிலையில், சஞ்சய் இயக்கப் போகும் படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இப்படத்தின் ஹீரோ குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
கவின், அஸ்வின், துல்கர் சல்மான், துருவிக்ரம் என பல நடிகர்களின் பெயர்கள் இப்படத்தின் ஹீரோ லிஸ்டில் அடிபட்டது. ஆனால், தற்போது இவர்கள் யாருமே இப்படத்தில் நடிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, படத்தின் பட்ஜெட் சற்று அதிகரித்துள்ள காரணத்தால், பெரிய மார்க்கெட் வைத்துள்ள ஹீரோவிடம் இந்த கதையை கூறியுள்ளார் சஞ்சய். அவர் வேறு யாரும் இல்லை நடிகர் சிவகார்த்திகேயன் தான். அவரிடம் தன்னுடைய முதல் படத்தின் கதையை சஞ்சய் கூறியுள்ளார். ஆனால், இது எனக்கான படம் கிடையாது என்னுடைய படம் என்றால் அதில், சில கமர்சியல் விஷயங்கள் இருக்க வேண்டும் என கூறி சஞ்சய் சொல்லிய கதையை சிவகார்த்திகேயன் நிராகரித்து விட்டதாக, கூறப்படுகிறது.
மேலும், கமர்சியல் விஷயங்கள் இல்லை என்று சொல்லி சிவகார்த்திகேயன் நிராகரித்ததாக சொல்லப்பட்டாலும், மறுபக்கம் விஜயும் இதற்கு ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. அதாவது, விஜய்யின் ஆசி இல்லாமல் தான் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில், சஞ்சய் கதையில் படம் நடித்தால் நாம் விஜயின் அதிருப்திக்கு ஆளாக வேண்டும். விஜய் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டும் என்று நினைத்து தான் சஞ்சய் கூறிய கதையை வேண்டாம் என சிவகார்த்திகேயன் நிராகரித்து விட்டதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.