சன் டிவி சீரியலில் இருந்து விலகிய சஞ்சீவ்… இனி அவருக்கு பதில் இவர்!
Author: Udayachandran RadhaKrishnan4 December 2024, 7:47 pm
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் பெரும்பாலும் இல்லத்தரசிகள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக மதியம் ஒளிபரப்பாகும் சீரியலில் லட்சுமி சீரியலுக்கு மவுசு உண்டு.
கடந்த மார்ச் 2024ல் தொடங்கிய இந்த தொடர், 100 எபிசோடுகளைத் தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. பாலசேகரன் எழுதிய இந்த கதை, ஒரு பெண்ணை மையமாகக் கொண்டுள்ளது.
இதையும் படியுங்க: அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாப் போச்சு : சந்தானம் எடுத்த திடீர் முடிவு!
தற்போது இந்த சீரியலைச் சுற்றி புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, இதில் நாயகனாக நடித்துவந்த சஞ்சீவ் வெங்கட் தொடரிலிருந்து விலகியுள்ளார் என்று கூறப்படுகிறது.
அவரின் இடத்தை நிரப்பும் வகையில், இனி “மகராசி” சீரியல் புகழ் ஆர்யன் இந்த தொடரில் நாயகனாக நடிக்க கமிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.