நட்சத்திர சீரியல் ஜோடியாக பார்க்கப்படுபவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. இவர்கள் இருவரும் சேர்ந்து ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்ததன் மூலமாக இருவருக்குள்ளும் ஏற்பட்ட கெமிஸ்ட்ரி பின்னர் காதல் ஆக மாறியது.

இவர்கள் இருவரும் காதலித்து ஆலியா மானஸாவின் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டாலும் சஞ்சீவி வீட்டில் அரவணைத்து ஏற்றுக் கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஒரு மகள் ஒரு மகன் என இரண்டு குழந்தைகளைப் பெற்ற ஆலியா மானசா சஞ்சீவ் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியாக இல்லற வாழ்க்கையில் வாழ்ந்து வருகிறார்கள் .

இப்படியான நேரத்தில் சஞ்சீவ் என்னுடைய புதிய காதல் எனக்கூறி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அது என்ன வீடியோ என்றால்… அவர் கீபோர்ட் வாசிக்கும் வீடியோ தான். அவரின் இந்த புது முயற்சி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக. அவன் மிகச் சிறப்பாக இசையமைப்பதாக எல்லோரும் கருத்து கூறி வாழ்த்தி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ: