‘வாரிசு’வுடன் விஜய்யும், ‘துணிவு’டன் அஜித்தும்..! நீங்க எப்படி?.. கேள்வி கேட்ட நிருபருக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகர்..!

Author: Vignesh
21 November 2022, 11:00 am

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி சினிமா வாய்ப்பை பெற்றவர் சந்தானம். அதன்பின் ஒருசில படங்களில் சைட் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்து பின் காமெடி நடிகராக முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்தார்.

அதன்பின் தனக்கான ஒரு ரூட்டை மாற்றி கதாநாயகன் அவதாரம் எடுத்தார். தற்போது ஏஜெண்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்துள்ள சந்தானம் அதன் டிரைலர் விழாவில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

santhanam - updatenews360

நிகழ்ச்சியில் விஜய்யின் வாரிசு படம் அக்கடதேசத்தில் வெளியிட பிரச்சனை செய்கிறார்கள் இதுபற்றி என்ன கருத்து என்று கேட்கப்பட்டது. அதற்கு சந்தானம் மேடையில் விஜய் சாருக்கு நாங்கள் சப்போர்ட்டாக இருப்போம் என்று கூறியுள்ளார்.

மேலும் நிரூபர்களை சந்தித்த போது ஒரு நிருபர் பொங்கலுக்கு அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு படம் வெளியாகவுள்ளது. நீங்கள் எதை பார்ப்பீர்கள் என கேட்டுள்ளார்.

santhanam - updatenews360

அதற்கு சந்தானம் நிரூபரை முன்னாடி வரவழைத்து நீங்கள் எதை பார்ப்பீர்கள் என்று கேட்க இரண்டுமே பார்ப்பேன் என்று நிரூபர் கூறியுள்ளார். அதற்கு சந்தானம் நீ மட்டும் ரெண்டும் பார்ப்ப நான் பார்க்க மாட்டேனா என்று பதிலடி கொடுத்துள்ளார்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!