என் வாழ்க்கைக்கு உயிர் கொடுத்தவர் சிம்பு…பிரபல காமெடி நடிகர் உருக்கம்.!
Author: Selvan15 February 2025, 9:19 pm
நடிகர் சந்தானம் நெகிழ்ச்சி
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்து வந்த சந்தானம் வெள்ளித்திரையில் நுழைந்து அசுர வேகத்தில் முன்னேறினார்.
இதையும் படியுங்க: தேவா சொல்லுவது பொய்..COPY RIGHTS உண்மையை உடைத்த ஜேம்ஸ் வசந்த்.!
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சந்தானம் நான் சினிமாவில் இருக்க காரணமே சிம்பு தான் என கூறியுள்ளார்,அவர் இல்லனா இன்னைக்கு நான் இல்லை,டிவி ல நடிச்சுட்டு இருந்த என்னை கூட்டிட்டு வந்து வல்லவன் படத்தில் நடிக்க வைத்து எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் என அந்த பேட்டியில் நெகிழ்ச்சியோடு தெரிவித்திருப்பார்.
ஆரம்பத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக ஜொலித்த சந்தானம்,பின்பு ஹீரோவாக நடிக்க தொடங்கினர்,ஆனால் மக்கள் இவரை ஹீரோவாக கொண்டாடவில்லை,சமீபத்தில் வெளிவந்த மதகதராஜா திரைப்படத்தில் இவருடைய அல்டிமேட் காமெடி ரசிகர்களை வயிறுகுலுங்க சிரித்த வைத்தது,இதனால் பழைய சந்தானத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்,அவரை மீண்டும் காமெடியனாக நடிக்குமாறு திரைபிரபலங்கள்,ரசிகர்கள் உட்பட பலர் கூறி வந்தனர்.
இதனால் வரக்கூடிய படங்களில் காமெடியனாக நடிப்பதாக கூறி இருந்தார்,அந்த வகையில் இவர் சிம்புவின் STR-49 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் சிம்பு,சந்தானம் கூட்டணியை மீண்டும் திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.