நான் அந்த ராமசாமி இல்ல.. பெரியாரை விமர்சித்து வம்பில் சிக்கிய சந்தானம்; வைரலாகும் ஸ்க்ரீன் ஷாட்..!(வீடியோ)

Author: Vignesh
16 January 2024, 2:00 pm

பீப்பிள் மீடியா ஃபேக்டரி, தயாரிப்பாளர் T.G விஸ்வபிரசாத் வழங்கும்
’டிக்கிலோனா’ புகழ் இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ’வடக்குபட்டி ராமசாமி’ படம் ஒருநாள் கூட இடைவெளி இல்லாமல் 63 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி படத்தை முடித்து புதிய சாதனை படைத்துள்ளது. ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு தீபக் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், சிவ நந்தீஸ்வரன் படத்தொகுப்பாளராகவும், ராஜேஷ் கலை இயக்குநராகவும், திரு.வி.ஸ்ரீ.நட்ராஜ் கிரியேட்டிவ் புரொடியூசராகவும், ஷெரீப் நடன இயக்குநராகவும் உள்ளனர். ’வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தை T.G விஸ்வபிரசாத் தயாரிக்க விவேக் குச்சிபோட்லா இணைந்து தயாரித்துள்ளார்.

‘வடக்குபட்டி ராமசாமி’ திரைப்படம் குறித்தான அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே இந்தப் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நடிகர் சந்தானம்-இயக்குநர் கார்த்திக் யோகியின் முந்தைய ‘டிக்கிலோனா’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியும் இதற்கு முக்கியக் காரணம். இப்படம் அதன் எண்டர்டெயின்மெண்ட் விஷயங்களுக்காக பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்றது.

சந்தானம் மற்றும் மேகா ஆகாஷ் நடிக்கும் இப்படத்தில் நடிகர் தமிழ் வில்லனாக நடிக்கிறார். ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவிமரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேசு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

vadakkupatti ramasamy-updatenews360

இந்நிலையில், சந்தானம் நடிப்பில் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டது. கவுண்டமணி செந்தில் புகழ்பெற்ற நகைச்சுவை கதாபாத்திரமான வடக்குப்பட்டி ராமசாமி என்ற பெயரை தலைப்பாக வைத்துள்ளார்கள். இந்த படத்தில் ஈவெ ராமசாமியை கிண்டல் அடிக்கும் வகையில், இந்த சாமியே இல்லைன்னு ஊருக்குள்ள சொல்லிட்டு திரிஞ்சியே அந்த ராமசாமிதானே என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. பிப்ரவரி 2ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆக உள்ளது வடக்குப்பட்டி ராமசாமி.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சந்தானம் பொங்கல் வைத்து கொண்டாடி உள்ளார். அப்போது, வடக்குப்பட்டி ராமசாமி படத்தை பிரமோட் செய்வது போல ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த சாமியே இல்லைன்னு ஊருக்குள்ள சொல்லிட்டு திரிஞ்சியே அந்த ராமசாமி தான நீ என்று ஒருவர் கேட்க சந்தானமே, பொறுமையாக சாமிக்கு கற்பூரம் ஏற்றி நான் அந்த ராமசாமி இல்லை என்று சொல்லி கற்பூர தட்டினை ஏந்தி நிற்கிறார். முன்னதாக, தந்தை பெரியார் என்று அழைக்கப்படும் ஈவெரா கடவுள் இல்லை கடவுளை வணங்குறவன் காட்டுமிராண்டி என்று சொல்லி இருக்கிறார். அந்த வசனத்தை நினைவூட்டும் வகையில், வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் வசனம் வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பெரியாரை குறிப்பிட்டு இந்த வசனம் வைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதனை கண்ட பலரும் சந்தானத்தை திட்டி தீர்த்து வந்தநிலையில், அவர் இந்த பதிவை நீக்கினாலும், இதனுடைய ஸ்க்ரீன் ஷாட் மற்றும் வீடியோ தற்போதும் வைரலாகி வருகிறது.

மேலும், இப்படி ஒரு நிலையில் PTR சந்தானம் குறித்து பேசிய பழைய வீடியோ ஒன்றை நெட்டிசன்கள் மீண்டும் வைரலாக்கி வருகின்றனர். அதில், பேசியுள்ள அவர் ‘ஜக்கி வாசுதேவன், சந்தானம் போன்றவர்கள் தீய சக்தியாக நான் கருதுகிறேன் என்றும், மத நல்லிணக்கத்தை உடைத்து சமுதாயத்தில் மத கலவரத்தை உருவாகும் தீய சக்திகள்’ என்று பேசி இருந்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 408

    0

    0