கதை சிறப்பாக இருந்தது…. விக்னேஷ் சிவன் படத்தை நிறுத்திய அஜித் குறித்து பேசிய சந்தானம்!

Author: Shree
20 July 2023, 12:33 pm

நடிகர் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில் சில காரணங்களால் அது கை கூடி வரவில்லை. ஆம் கதை பிடிக்கவில்லை என கூறி விக்னேஷ் சிவனை அஜித் அப்படத்தில் இருந்து தூக்கிவிட்டு மகிழ்திருமேனியை இயக்க கமிட் செய்த நிலையில், விக்னேஷ் சிவனுக்கும் அஜித்துக்கும் கருத்து வேறுபாடு என்று பலவிதமான செய்திகள் வெளியானது.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாவிட்டாலும், விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து AK62 பெயரை நீக்கி தான் அப்படத்தில் இருந்து விலகியதை சூசகமாக அறிவித்தார். AK62-வில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும், அஜித் மீதான அன்பை இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளிப்படுத்தி வந்தார். அதையடுத்து பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் புதிய படமொன்றை இயக்கி வருகிறாராம். அதில் மறைந்த ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க அப்படத்தை கமல் ஹாசன் தயாரிக்கிறார்.

இந்நிலையில் ஏகே 62 படத்தில் சந்தானம் கமிட் ஆகியிருந்ததாகவும் அந்த படம் நின்றுபோனது குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதாவது, “விக்னேஷ் சிவன் என்னிடம் கதை கூறினார். அதில் என்னுடைய கதாபாத்திரம் சிறப்பாக இருந்தது. அது சீரியஸான ரோல் ஆனாலும், நகைச்சுவையாகவும் இருந்தது. அந்த படத்திற்காக மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தேன்.

படப்பிடிப்பின் போது அஜித்துடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படத்தை வெளியிட்டு நான் இந்த படத்தில் நடிக்கிறேன் என அறிவிக்கலாம் என இருந்தோம். ஆனால், அது நடக்கவில்லை.” என கூறி வருத்தப்பட்டார். தற்போது இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 625

    3

    1