பழைய வித்தையை கையில் எடுக்கும் சந்தானம்…அடுத்தடுத்து படங்களின் அப்டேட்டை போட்டுடைத்த தயாரிப்பாளர்..!

Author: Selvan
27 January 2025, 3:55 pm

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் தன்னுடைய காமெடியால் ஜொலித்தவர் நடிகர் சந்தானம்.இவர் ஆரம்ப காலகட்டத்தில் தொடர்ந்து பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார்.

கரியரின் உச்சத்தில் இருந்த போது காமெடி ரோலை விட்டு ஹீரோவாக நடிக்க களமிறங்கினார்.தொடர்ச்சியாக ஹீரோவாக நடித்து வந்த சந்தானத்தை ரசிகர்கள் பெரிதாக கொண்டாடவில்லை,இருந்தாலும் சந்தானம் ஹீரோவாக நடிக்கவே முயற்சி செய்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் பொங்கல் அன்று வெளியான மதகதராஜா திரைப்படத்தில் சந்தானத்தின் காமெடி கலக்கலாக இருந்தது மட்டுமில்லாமல்,பழைய சந்தானத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு காமெடியனாக திரையில் ரசிகர்கள் பார்த்ததால் அவர் மீண்டும் காமெடி ரோலை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்,பல திரைப்பிரபலங்களும் அவரை காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் சந்தானம் இனிமேல் காமெடி ரோலில் நடிக்க இருப்பதாக பிரபல தயாரிப்பாளர் தஞ்ச ஜெயன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.அதில் அவர் நான் சந்தானத்திடம் பேசினேன்,உங்களுடைய காமெடி கண்டிப்பாக இந்த தலைமுறை ரசிகர்களை கவரும் எனவே நீங்கள் ஹீரோவாக ஒரு படத்தில் வாங்கும் சம்பளம் காமெடியனாக நடித்தாலும் வழங்கப்படும்,அதனால் தயவு செய்து காமெடி ரோலில் நடிங்கள் என கூறினேன்,அதற்கு அவரும் இரண்டு மூன்று படங்கள் நீங்கள் சொல்லுவது போல செய்து பார்க்கலாம் என உறுதி அளித்தார் என அந்த பேட்டியில் கூறியிருப்பார்.

மேலும் சந்தானம் காமெடியாக விஷால் கூட ஒரு படம்மும் ரவி மோஹனுடன் ஒரு படமும் ஆர்யா கூட ஒரு படத்திலும் நடிக்க உள்ளார் என்ற தகவலும் அவர் கூறியுள்ளார்.

  • lokesh kanagaraj decided to take break from social media லோகேஷ் கனகராஜ் எடுத்த திடீர் முடிவு! என்ன சார் கடைசில இப்படி பண்ணிட்டீங்களே?