புலி வால தொட்டா நீங்க என்ன ஆம்பளையா? சர்ச்சையில் சிக்கிய சந்தானம்.. வறுத்தெடுத்த பிரபல நடிகை!!

Author: Vignesh
29 December 2022, 2:10 pm

தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி, செந்திலுக்கு பிறகு நடிகர் சந்தானம் காமெடியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இவர் நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது தமிழ் நகைச்சுவை உலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் தான் நடிகர் சந்தானம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின் இவர் முதலில் குணால் நடித்த ‘ பேசாத கண்ணும் பேசுமே’ என்ற படத்தில் சிறு காட்சியில் தோன்றியிருப்பார். இந்த திரைப்படத்திற்கு பின்னர் தான் நடிகர் சந்தானம் காதல் அழிவதில்லை என்ற படத்தில் நடித்திருந்தார்.

santhanam - updatenews360

அதனை தொடர்ந்து நடிகர் சந்தானம் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து இருந்தார். நடிகர் சந்தானம் கடந்த சில வாருடங்களாக சினிமாவில் ஹீரோவாக திகழ்ந்து கொண்டு வாருடங்களாக ஆனால், சில ஆண்டுகளாக இவர் நடிப்பில் வெளியான சபாபதி, டிக்கிலோனா, பாரிஸ் ஜெயராஜ், பிஸ்கோத், டகால்டி போன்ற படங்கள் எல்லாம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை. சமீபத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான படம் குலு குலு படத்தை ரத்னகுமார் இயக்கி இருக்கிறார். குலு குலு படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். குலு குலு படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

santhanam - updatenews360

இப்படி தொடர் தோல்வியடைந்த திரைப்படங்களுக்கு பிறகு தற்போது நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஏஜென்ட் கண்ணாயிரம்”. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ரியா சுமன், சுருதி ஹரிஹரன், ரெடின் கிங்ஸ்லி, புகழ், முனீஷ்காந்த், குரு சோமசுந்தரம் உட்பட புகழ், நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். டிடெக்டிவ் ட்ராமாவாக இந்த படம் உருவாகி இருக்கிறது.

கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கில் நவீன் போலிஷெட்டி நடிப்பில் ரிலீசாகி வெற்றிபெற்ற ஏஜெண்ட் ஸ்ரீவத்சவா படத்தின் தமிழ் ரீமேக். இப்படம் கடந்த மாதம் 25 தேதி திரையரங்ககுளில் வெளியாகிய நிலையில் எதிர்பார்த்த அளவிற்கு மக்களிடம் வெற்றியடையவில்லை. இப்படத்திற்கு முன்னர் வெளியாகியிருந்த குளுகுளு திரைப்படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தராமல் தோல்வியடைந்த நிலையில் முன்னணி காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் திகழ்ந்த நடிகர் சந்தானத்தின் திரை வழக்கை கேள்விக்குறியாகியுள்ளது.

santhanam - updatenews360

இப்படி பட தோல்வி ஒரு பக்கம் இருக்க மற்றொரு பிரச்சனையில் நடிகர் சந்தானம் சிக்கியுள்ளார். அதாவது கிறிஸ்துமஸ் மற்றும் புது வருட பிறப்பை கொண்டாடும் நோக்கில் நடிகர் சந்தானம் தற்போது சுற்றுலா சென்றுள்ளார். இந்த நிலையில் உயிரியல் பூங்கா ஒன்றில் புலியின் வலை பிடித்தபடி வீடியோ ஒன்றை நடிகர் சந்தானம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு “இதற்கு பெயர் தான் புலி வாலை பிடிக்கிறதா என்று” என்று பதிவிட்டிருந்தார். நடிகர் சந்தானம் காமெடிக்காக ட்விட்டரில் பதிவிட்டிருந்த வீடியோ பதிவு அவருக்கே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

rashmi-gautam04-copy-3

அதாவது அந்த விடியோவில் நடிகர் சந்தானம் புலி வாலை பிடித்திருக்கும் போது அந்த புலியை ஒருவர் கட்டயை வைத்து மண்டையில் தட்டுவார். இதனை தெலுங்கு நடிகையான “ராஷ்மி கவுதம்” ரீடுவிட் செய்து “புலி மீது உங்களுக்கு எந்த வித அனுதாபமும் ஏற்படவில்லை, மயக்கத்தில் இருக்கும் புலியை தொந்தரவு செய்யப்பட்டதினால் எழுந்தது. அது உங்களை ஒரு வலிமையான மனிதனாக காட்டுவதற்காக செய்திர்களா? இல்லை, உங்களுடைய நினைவை இழந்து செய்திர்களா? என்று விமர்சித்து பேசியிருந்தார். இந்த பதிவு தற்போது ஷோசியல் மீடியால் வைரலாகி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 594

    0

    0