விஜய் சேதுபதியை திட்டிய ரசிகருக்கு பதிலடி கொடுத்த சாந்தனு! அப்படி என்னதான் நடந்தது?
Author: Prasad2 April 2025, 4:37 pm
தோல்வி இயக்குனருடன் கூட்டணியா?
“விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் பாண்டிராஜ் இயக்கத்திலும் ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படங்களை தொடர்ந்து விஜய் சேதுபதி தெலுங்கு இயக்குனரான பூரி ஜகன்னாத்தின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். கடந்த தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு பூரி ஜகன்னாத், தயாரிப்பாளர் சார்மி ஆகியோருடன் இணைந்து ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்.

கண்டபடி திட்டிய ரசிகர்
இந்த நிலையில் “X” தளத்தில் ரசிகர் ஒருவர், “பூரி ஜகன்னாத் சமீபத்தில் எந்த ஹிட் படத்தையும் கொடுக்கவில்லை. மகாராஜா படத்திற்கு பின்பு புத்திசாலித்தனமாக விஜய் சேதுபதி படங்களை தேர்வு செய்வார் என்று நினைத்தால், தோல்வி பட இயக்குனருடன் நடிக்கிறாரே” என்று குறிப்பிட்டு இருந்தார்.
பதிலடி தந்த சாந்தனு…

ரசிகரின் இந்த கருத்துக்கு நடிகர் சாந்தனு, “சகோதரரே, எவர் குறித்தும் இது போன்று பேசாதீர்கள். பொது தளத்தில் வார்த்தைகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள். என்ன இருந்தாலும் அவர் ஒரு மதிப்பிற்குரிய இயக்குனர். நாம் பிறருக்கு மதிப்பளிக்க வேண்டும். உங்களிடம் இருந்து இதனை எதிர்பார்க்கவில்லை” என பதிலடி கொடுத்துள்ளார். சாந்தனுவின் பதிலடியை தொடர்ந்து அந்த ரசிகர் தனது கருத்தை “X” தளத்தில் இருந்து நீக்கிவிட்டார். அதன் பின் அந்த ரசிகர் சாந்தனுவிடம் தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்டதும் குறிப்பிடத்தக்கது.