“அலட்சியம், பேராசை” – 10 வருஷமா இதேநிலை தான்.. கடுமையாக சாடிய சந்தோஷ் நாராயணன்..!

Author: Vignesh
6 December 2023, 3:30 pm

சென்னையில் பல இடங்களில் மிக்ஸாம் புயல் காரணமாக வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. புயல் நேற்று கரையை கடந்தாலும், அதனால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மக்கள் இதுவரை மீளவில்லை.

தற்போது, மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் மிக்ஸாம் புயல் கரையை கடந்து விட்டாலும் அதனால் ஏற்பட்ட பிரச்சனை குறித்து சந்தோஷ் நாராயணன் பேசியுள்ளார். அதில் அவர் 10 ஆண்டுகளாக இதே பிரச்சனை தான் தொடர்கிறது. அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசை போன்றவை மழைநீர் மற்றும் கழிவுநீர் ஒரே கால்வாயில் கொட்டுவதற்கு வழிவகைக்கிறது.

அதனாலேயே, ஒவ்வொரு முறையும் ஆறு போல் எங்கள் குடியிருப்புகளை மழை நீர் தாக்குகிறது. இந்த நேரத்தில், ஏதேனும் நோய் அல்லது மருத்துவ அவசர உதவி ஏற்பட்டு மரணத்தைக் கொண்டு வருகிறது. மீட்பு பணிக்காக என்னிடம் ஒரு படகு மற்றும் பல பம்புகள் இருக்கிறது. மக்கள் தொடர்பு கொள்ளவும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறேன் என்று சந்தோஷ் நாராயணன் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ