தென்னிந்திய சினிமாவின் ஹேண்ட்ஸம் இளம் ஹீரோவாக பார்க்கப்படுபவர் நடிகர் விஜய் தேவர்கொண்டா. இவர் தெலுங்கு சினிமாவில் வெளியான நுவ்விலா என்ற படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். அதன் பின்னர் அவர் நடித்த யெவடே சுப்பிரமணியம் என்ற படம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகினார்.
தொடர்ந்து விஜய் தேவர்கொண்டாவுக்கு வாய்ப்புகள் கிடைக்க பெல்லி சூப்புலு படத்தில் நடித்து புகழின் உச்சத்திற்கே சென்றார். அப்படத்திற்காக சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது மற்றும் சிறந்த படத்திற்கான ஃபிலிம்ஃபேர் விருதுகளை பெற்றார். அதன் பின்னர் ஹிட் ஹீரோவாக பார்க்கப்பட்ட விஜய் தேவர்கொண்டா தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
தொடர்ந்து அர்ஜுன் ரெட்டி, மகாநடி, ராஷ்மிகாவுடன் நடித்த கீத கோவிந்தம், டாக்ஸிவாலா, போன்றவை அதிக வசூல் செய்த அவரின் தெலுங்கு படங்களின் பட்டியல். அர்ஜுன் ரெட்டி படத்தில் அவரது நடிப்பு அவருக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது – தெலுங்கு உட்பட பல பாராட்டுக்களைப் பெற்றது. கடைசியாக சமந்தாவுடன் குஷி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் விக்ரமின் தெய்வத்திருமகள் படத்தில் அவரின் ரீல் மகளாக நடித்திருந்த சாரா தற்போது விஜய் தேவர்கொண்டாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். இப்படத்தை கெளதம் என்பவர் இயக்க உள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கிட்ட தட்ட 16 வயசு வித்யாசமுடன் திரையில் இவர்களது ரொமான்ஸ் காட்சிகள் சர்ச்சைக்குள்ளாகும் என பேசப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.