குறும்புத்தனம் இன்னும் குறையவே இல்லை – குழந்தையுடன் சரண்யா மோகன் – கியூட் வீடியோ!

Author:
30 October 2024, 1:03 pm

தமிழ் சினிமாவில் ஹீரோயினுக்கு தங்கை, ஹீரோவுக்கு தங்கை என குணசித்திர வேடங்களில் நடித்தே மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் பேவரைட் நடிகையாக மனம் கவர்ந்தவர் நடிகை சரண்யா மோகன். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படம்தான் யாரடி நீ மோகினி. இந்த திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருப்பார் மேலும் கருணாஸ், கார்த்தி குமார் போன்ற பல்வேறு பிரபலங்களும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.

saranya mohan

இந்த படம் வெளியானபோது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் மாபெரும் வெற்றியை தந்தது.குறிப்பாக நயன்தாராவின் தங்கையாக இந்த திரைப்படத்தில் நடித்த சரண்யா மோகன் மிகப்பெரும் அடையாளத்தை தேடிக்கொண்டார்.

இவர் இந்த திரைப்படத்திற்கு முன்பாகவே காதலுக்கு மரியாதை என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் கேரளாவை பூர்வீகமாக கொண்ட சரண்யா கடந்த 2015 ஆம் ஆண்டு அரவிந்த் கிருஷ்ணன் எதுவரை திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் தனது குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் சரண்யா மோகனின் லேட்டஸ்ட் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் அவரது அழகு இன்னும் குறையாமல் அப்படியே இருக்கிறது. திருமணமாகி இரண்டு குழந்தைகளை பெற்ற பிறகும் அவரது அழகு இன்னும் குறையவே இல்லை. இன்னும் கூட .நீங்கள் திரைப்படங்களில் நடிக்கலாம் அந்த குறும்புத்தனம் இன்னும் உங்களை விட்டு போகவே இல்லை எனக் கூறி இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்து லைக் செய்து வருகிறார்கள்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ