தமிழ் சினிமாவில் தனுஷ் சிவகார்த்திகேயன், விஷால், உதயநிதி ஸ்டாலின், அஜித், விக்ரம் , விஷ்ணு விஷால், விமல் உள்ளிட்ட பல பிரபலமான நடிகர்களுக்கு அம்மா கேரக்டரில் நடித்து பெரும் புகழ்பெற்றவர் தான் சரண்யா பொன்வன்னன் .
இவர் அம்மா கதாபாத்திரத்துக்கு பக்காவாக பொருந்தும் நடிகையாக தமிழ் சினிமாவில் நடித்து பிரபலம் ஆனார். அம்மா ரோல் என்றாலே இயக்குனர்களுக்கு டக்கென ஞாபகத்துக்கு வருந்துவிடுவார் நடிகை சரண்யா பொன்வண்ணன் . அந்த வகையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் வேலையில்லா பட்டதாரி இந்த திரைப்படத்தில் தனுஷின் அம்மாவாக நடிகை சரண்யா பொன் வண்ணன் நடித்திருப்பார்.
இந்த திரைப்படத்தில் அவரது கதாபாத்திரத்துக்கான போர்ஷன் மிகக்குறுகியது. காட்சிகள் குறைவாக இருந்தாலும் அது அத்தனையும் மிகவும் அழுத்தமான காட்சிகள் தான். குறிப்பாக அப்படத்தில் இடம்பெற்ற அம்மா அம்மா பாடல் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகி சரண்யா பொண்ணுகளுக்கு பெயரும் புகழும் பெற்று தந்தது.
இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததோடு அவருக்கு ஒரு நல்ல அடையாளமான வெற்றி படமாகவும் பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் தனுஷ் உடன் நடித்த அனுபவத்தை குறித்து பகிர்ந்து கொண்டார் நடிகை சரண்யா பொன் வண்ணன் .
இந்த திரைப்படத்தின் கதையை தனுஷ் என்னுடைய வீட்டிற்கு வந்து சொன்னார். அந்த சமயத்தில் வீட்டிற்கு வந்து கதை சொல்கிறேன் எனக்கு சாப்பாடு எல்லாம் சமைச்சு போடுங்க என்று பேசி என்னிடம் கதை சொன்னார். ஆனால், படத்தில் நடித்தபோது எனக்கு குறைவான காட்சிகள் இருப்பதை உணர்ந்து ரொம்பவே கஷ்டப்பட்டேன்.
இப்படிப்பட்ட படத்தில் ஏன் நடிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் எனக்கு அந்த படத்தின் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்த போதே தோன்றியது. அதுமட்டுமில்லாமல் படத்தில் என்னுடைய காட்சிகள் ரொம்ப குறைவு என்பதால் நான் அடிக்கடி தனுஷிடம் சென்று என்னை ஏன் இந்த படத்தில் கூப்பிட்டீர்கள்? என அவரை தொடர்ந்து கேள்வி எழுப்பி நச்சரித்துக் கொண்டே இருந்தேன்.
இதையும் படியுங்கள்: இப்போ கூட அவங்க வந்தா கல்யாணம் பண்ணிப்பேன்…. 83 வயசிலும் நடிகை மீது ஆசையா?
ஆனால், நடிகர் தனுஷோ அமைதியாக இருங்கள். படம் வந்த பிறகு பாருங்கள். உங்களோட போர்ஷன் மிகச்சிறப்பாக இருக்கும் என சொல்லி என்னை சமாதானப்படுத்துவார். அதன் பிறகு படம் வெளியாகிய மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் அடித்தது. நான் இவ்வளவு காட்சிகளில் நடித்திருக்கிறேனா என்பது எனக்கு அந்த படத்தின் டப்பிங் பேசும்போது தான் தெரிய வந்தது என சரண்யா பொன்வண்ணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.