ஜீன்ஸ் பேண்ட்…ஜெர்கின்… கூலிங் க்ளாஸ் – மாடர்ன் லுக்கில் மாஸ் காட்டும் சரண்யா பொன்வண்ணன்!
Author: Shree27 July 2023, 3:15 pm
ISO முத்திரை பதித்த அழகான அம்மா நடிகை என்றால் அது சரண்யா பொன்வண்ணன் தான். தென்னகத்து மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கிலும் எல்லோருக்கும் அம்மாவாக நடித்து வருகிறார். இவர் கேரளாவில் பிறந்து வளர்ந்து ஆரம்பத்தில் 1980களில் ஹீரோயினாக திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
பின்னர் திருமணத்திற்கு பின்ன சில ஆண்டுகள் சினிமாவிற்கு கேப் விட்டிருந்த அவர் குணச்சித்திர வேடங்களில், பெரும்பாலும் ஹீரோக்களின் அம்மா வேடத்தில், நடித்து பெரும் புகழ் பெற்றார். அப்படி அவர் அம்மாவாக நடித்து மாபெரும் ஹிட் அடித்த திரைப்படங்கள் ராம், தவமாய் தவமிருந்து, எம்டன் மகன், களவாணி, வேலையில்லா பட்டதாரி, கிரீடம், தெனாவட்டு உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் ஹிட் அடித்தது.
இதனால் சரண்யா பொன்வண்ணன் சிறந்த அம்மா நடிகையாக பல விருதுகளை வாங்கியுள்ளார். மேலும் அவர் சினிமாவை தாண்டி தனக்கு பிடித்த டைலர் தொழில் செய்து வருகிறார்.
எப்போதும் சேலை, பெரிய போட்டு என மிகவும் ஹோம்லியாக இருக்கும் சரண்யா பொன்வண்ணன் தற்போது ஜீன்ஸ் பேண்ட்…ஜெர்கின்… கூலிங் க்ளாஸ் என பக்கா மாடர்னாக வெளிநாட்டில் கணவர் மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகியுள்ளது.