தனுஷ் – ஐஸ்வர்யா திருமணத்தால் கடுப்பான நடிகர்கள்.. யாருங்க அவன் நாக்கு பூச்சி மாதிரி இருக்கான்..!

Author: Vignesh
30 January 2024, 11:45 am

கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் பிறந்த இரண்டு மகன்களை ரஜினிக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால் தன்னுடைய பேரன்களை தன் முன்னே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ரஜினி ஆசைப்பட்டார்.

இதனிடையே தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். திடீரென இருவரும் தங்களுடைய விவாகரத்தை அறிவித்ததால், அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். இதற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை.

பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், இருவரும் இன்றுவரை சட்டபூர்வமாக விவாகரத்து செய்ய அணுகவில்லை என்று கூறப்பட்ட நிலையில், தனுஷ்சை பிரிந்த பின் இயக்கத்தில் ஆர்வம் காட்டி வரும் ஐஸ்வர்யா தன் அப்பா ரஜினிகாந்த்தை வைத்து லால்சலாம் படத்தை இயக்கி உள்ளார்.

dhanush - updatenews360

இந்நிலையில், பிரிந்து வாழ்ந்து வந்தாலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே ஒரு விஷயத்தில் போட்டு இருந்து கொண்டே தான் இருக்கிறது. அவர்களை சேர்த்து வைக்க குடும்பத்தினர் முயன்றுவருவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

aishwarya - updatenews360

இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு, ஐஸ்வர்யா தனுஷ் திருமணம் பற்றி பேசியுள்ளார். அதில், அவர் தனுஷ் ஐஸ்வர்யாவை காதலிப்பதற்காக போயஸ் கார்டனில் பிளாட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார் என்று பத்திரிகைகளில் கிசுகிசுகள் எழுந்தது.

dhanush - updatenews360

அவர்கள் திருமணம் நடந்த சமயத்தில் சரத்குமாரின் ஐயா படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அங்கு நான் சென்றிருந்தேன். அப்போது, நெப்போலியன் என்னிடம், ‘என்னங்க எல்லா மீடியாக்காரங்களும் போயஸ் கார்டனிலேயே போய் நின்னுட்டீங்களே’ என நொந்துகொண்டார்.

sarathkumar napoleon

அதேபோல், சரத்குமார் என்னிடம் யாருங்க அவன் ஒல்லியா நாக்குப்பூச்சி மாதிரி ஒருத்தன் வந்து இருக்கான். அவன் ரஜினி வீட்டில் பெண் எடுத்திருக்கான் என்று கூறினார். இந்த மாதிரி தான் பலரும் தனுஷ் ஐஸ்வர்யா திருமணம் பற்றி பேசினார்கள். அது பொறாமையாக கூட இருக்கலாம் என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 293

    0

    0